செப்டம்பர் 09, 2013

குறளின் குரல் - 509


9th Sep 2013

குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாணுடையான் ட்டே தெளிவு.                 
                             (குறள் 502: தெரிந்து தெளிதல் அதிகாரம்)

Transliteration:
kuDippiRandhu kuRRaththin nIngi vaDuppariyum
nANuDaiyAn kaTTE thElivu

kuDippiRandhu – Of a birth from good family lineage
kuRRaththin nIngi – without any blemishes
vaDuppariyum – fearing about blame
nANuDaiyAn– and feeling shameful about that
kaTTE thElivu – only such persons would be a rulers’ choice to work for him

This verse opines who should be kept close to self for rulers. A ruler should keep a person that is born in a family of good lineage, without any blemishes or faults, and being fearful and shameful about blame that may befall on him.  A similar thought is expressed in a later chapter (assessing friendship) by this verse, “kuDippiRandhu thankaN pazhinANu vAnaik koDuththum koLalvENDum naTpu”.

“Lineage of good family, free of blemishes, fearing and feeling shameful
 Of blame to come, is a person as the choice of a king as support of rule”

தமிழிலே:
குடிப்பிறந்து - நற்குடியிலே பிறந்தவரும்
குற்றத்தின் நீங்கி - தம்மேல் எவ்வித குற்றமும் இல்லாதவரும்
வடுப்பரியும் - மற்றும் பழி வருமே என்று
நாணுடையான் - அதற்கு வெட்குகின்றவருமாக
ட்டே தெளிவு - இருக்கிறவரே ஆள்வோர் தேர்ந்து தம்மோடு பணி செய்விப்பர்

யாரை தமக்கு அணுக்கமாகக் ஆள்வோர் கொள்ளவேண்டும் என்பதைச் சொல்லுகிற குறள் இது. நற்குடியிலே பிறந்து, எவ்வித குற்றமும் இல்லாமல், பழிவருமென்று அஞ்சி அதற்காக நாணுகின்றவரையே தம்முடைய ஆட்சிக்குத் துணையாகக் கொள்ளுவர் ஆளுவோர் என்கிறது  இக்குறள். நட்பாராய்தல் அதிகாரத்தில் யாரை நட்பாகக் கொள்ளவேண்டும் என்று சொல்லுகிறபோது, “குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக் கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு” என்று இங்கு சொல்லுகிற கருத்தை ஒட்டிச் சொல்லுகிறார் வள்ளுவர்.

இன்றெனது குறள்(கள்): (கருத்து ஒன்றாயினும், ஒலி நயத்துக்காக இரு குறள்கள்)

நற்குடித் தோன்றிகுற்றம் அற்றுபழிக் கஞ்சிநாணும்
பொற்புடையார் ஆள்வோரின் தேர்வு

naRkuDith thOnRikuRRam aRRupazhik kanjinANum
poRpuDaiyAr ALvOrin thErvu

நற்குடியும் குற்றமற்றும் கொள்பழிக்கு அஞ்சிநாணும்
பொற்புடையோர் ஆள்வோர்குற் றார்.

naRkuDiyum kuRRamaRRum koLpazhikku anjinANum
poRpuDaiyOr ALvORkkuR RAr

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...