51:
(Understanding the Key personnel - தெரிந்து தெளிதல்)
[This chapter is
all about choosing the right persons for the right job understanding their
heritage, lineage, character, intellect, resolve and capabilities. For a ruler
to successfully govern his territory knowledge of these and the ability to
assess who is comes from what background is very important. Though a ruler may
know the place and the time to do things, without trustworthy and capable
supporting hands that execute, the strength is not solid. Hence the chapter is on
understanding of the key personnel. To know the above said there are three
different measures. As the Sanskrit
texts would say, they are “what is seen” (prathyakshap pramANam), “what is
assumed” (anumAnap pramANam) and “what the scriptures say” (Agamap pramANam)]
8th Sep 2013
அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும்.
(குறள்
501: தெரிந்து தெளிதல் அதிகாரம்)
Transliteration:
aRamporuL
inbam uyirachcham nAngin
thirantherindhu
thERap paDum
aRam - virtue
poruL - wealth
inbam - pleasure
uyirachcham – the fear that a person has about his life
nAngin – in these four
thiran – what their disposition is
therindhu – must be known clearly
thERappaDum - and understood
In the very first verse of this chapter, there seems
to be some difference of opinion between the commentaries and their authors.
The prime reason for that is the list of four important aspects of life as
interpreted by the authors. The word “uyir achcham” seems misleading.
Instead of “achcham”, if it the word is taken as “echcham”, it
gives room to different interpretation.
“uyirachcham” means “fear of losing life”.
“uyir echcham” means “after life place” as in “heavens”. The second meaning fits the context in a
different way.
Parimelazhagar’s commentary uses a word “ubadhai”
in the context of “testing”; It says the ruler must test a person to
find out what his dispositions or convictions are in these four attributes to
findout how trust worthy that person is. A ruler must find out if a person
stays strong in the four apsects of virtue, wealth, pleasure and “heavenly
abode” so that anybody kindling their interest to act against the ruler would
not have any effect.
This verse is indeed confusing because the literal
meaning does not leave a context, and does not say, how the word “thErappaDum”
has to be interpreted here.
“A ruler must test a person on four atrributes, such as
Virture, Wealth
Pleasure,
disposition when the life is threatened for loyalty’s breadth”
தமிழிலே:
அறம் - தரும வழிகள்
பொருள் - செல்வத்தில் இருக்கும் நாட்டம், அக்கறை
இன்பம் - பெண்களின் பால் இருக்கும் நாட்டம், விழைவு
உயிரச்சம் - உயிர் இழக்க நேருமே என்னும் அச்ச உணர்வு
நான்கின் - இந்த நான்கிலும்
திறன்- ஒருவரின் திறமைகளையும்,
அவருக்கு எந்த அளவில் இருக்கின்றன என்பதையும்
தெரிந்து - தெளிவாக தெரிந்துகொண்டு
தேறப்படும் - புரிந்துகொள்ளவேண்டும்
இவ்வதிகாரத்தின் முதற்குறளிலேயே உரையாசிரியர்களிடம்
கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. கருத்து வேறுபாட்டுக்கான காரணம் நான்காவதாகக்
கூறப்படும் “உயிரச்சம்” என்ற சொல்தான். பொதுவாக, அறம், பொருள், இன்பம், வீடு என்னும்
நான்கும்தான் ஒன்றாக வைத்துப் பேசப்படும். ஆனால் “உயிரச்சம்” என்பது “வீடு” அல்ல. பரிதியாரும்,
காளிங்கரும் “உயிரெச்சம்” என்று கொண்டு, அதை உயிருக்குப்பின் வரும் “வீடு” என்று கொண்டுள்ளனர்.
அது பொருந்திவருகிறது.
பரிமேலழகர் உரை “உபதை” என்ற சொல்லைச்
“சோதனை” என்ற பொருளில் சொல்லி, இந்த நான்கையும் அரசர்கள் சோதனை செய்து தெளியவேண்டும்
என்கிறார். ஒருவரின் மன இயல்பைப் பற்றி அறிய அரசன் அறம், பொருள், இன்பம் மற்றும் அவருக்கு
உயிரின் மேலிருக்கும் அச்சம் இவற்றை சோதனை செய்து தெளியவேண்டும் என்கிறார். இந்நான்கிலும் ஒருவன் மற்றவர்கள் எது சொன்னாலும்
தாம் திரிபற இருக்கிறார்களா என்று சோதித்து அறிவது என்கிறார்.
இது ஓரளவுக்கு பொருந்துவதாகத் தோன்றினாலும்
பரிதியாரும், காளிங்கரும் சொல்வதுகூட பொருந்தியே வருகிறது அவர்களது கூற்றுபடி, ஒரு
அரசன் செய்யும் செயல்கள் அறம், பொருள், இன்பம், மற்றும் வீடு இவற்றைப் பற்றிய உணர்வோடு
செய்யப்படவேண்டும் என்கின்றனர் இருவரும்.
இன்றெனது குறள்:
ஆள்வோர்க் குறுதுணை முப்பாலும்
அப்பாலும்
மூள்வோரைத் தேர்தலொன் றே
(முப்பால் - அறம், பொருள், இன்பம், அப்பால், அதற்கு பின்பு வரும்
வீடு இவற்றை அறிவால் அறிந்தவரை)
ALvOrk kuRuthuNai muppAlum appAlum
mULvOraith thErdhalon RE
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam