செப்டம்பர் 24, 2013

குறளின் குரல் - 524


24th Sep 2013

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.
                             (குறள் 517: தெரிந்து வினையாடல் அதிகாரம்)
Transliteration:
idhanai idhanAl ivanmuDikkum enRAindhu
adhanai avankaN viDal

idhanai – this work
idhanAl – using this implement
ivanmuDikkum – this person will finish
enRAindhu – after such analysis and thinking
adhanai – that work
avankaN viDal – Assign to such a person of right abilities

Those that are in power must evaluate who will, with what implement, (how and what method), would complete a work and must entrust the work to such a person – says the verse. Though this has been said in the previous verses, the emphasis here is about the word, “idhanAl” which means both the method and the instruments/gadgets. The phrase “avar kaN viDal” also strogly yet subtly suggests “entrusting”, not interfering in the working methods of the chosen person. Beware that this verse does not say, “not supervising” at all. As far as the working ways for the assigned task, it should be left with the person who knows the job intimately. Nobody prevents a constructive intervention.

A pazhamozhi nAnURu poem, says the same, citing the feeding of salted food for a bull. There is nothing wrong with that, as that would prevent diseases for the bull to serve its master well. It says, because someone is relative or a friend, a job should not be entrusted. It must be entrusted with a person who knows the job well with adequate support. Afterall they would seek the guidance of knowledgeable. Even if they did not, still, the job would be done.

“This work will be done by this person, using this implement,
 Entrust after complete research to a person of skill and ment”

தமிழிலே:
இதனை - இவ் வினையை
இதனால் - இக்கருவி அல்லது வழிமுறையால்
இவன்முடிக்கும் - செய்ய இவனே தக்கவன்
என்றாய்ந்து - என்று ஒருவரைத் தேர்ந்து
அதனை - அச் செயலை
அவன்கண் விடல் - அவரிடத்தில் ஒப்படைத்து விடவேண்டும்

அதிகாரத்தில் இருப்பவர்கள் யாரால், எச்செயலை, எவ்வாறு (எக்கருவி கொண்டு, எவ்வழி முறையால்) செய்து முடிப்பார் என்று ஆராய்ந்து அறிந்து, அத்தகுதி உள்ளவர்களிடத்தில் அச்செயலைச் செய்து முடிக்கும் பொறுப்பினை விட்டுவிடவேண்டும். இதுவே இக்குறளின் கருத்து. முந்தைய குறள்களில் சொல்லப்பட்ட கருத்துதான் என்றாலும், “இதனால்” என்ற சொல் செய்யுங் கருவி, வழிமுறை ஆகிய இரண்டையும் ஒருங்கே குறிப்பதை உணரலாம். “அவர்கண் விடல்: என்றது ஆய்ந்து அறிந்தபின் அவர் செய்ய நம்பி ஒப்படைத்தலைக் குறிக்கும். இதில் நம்புதல் என்பது வேலையின் நேர்த்தியைப் பற்றி மட்டும்தான். செய்பவரைக் குறித்து அல்ல. முன்பு சொல்லப்பட்ட கருத்துக்கு முரணாகச் சொல்லப்படவில்லை.

பழமொழிப் பாடலொன்று,  இவ்வாறு செல்கிறது.

உற்றான் உறாஅன் எனல்வேண்டா ஒண்பொருளைக்
கற்றானை நோக்கியே கைவிடுக்க - கற்றான்
கிழவனுரை கேட்கும் கேளா னெனினும்
இழவன் றெருதுண்ட உப்பு.

நமக்கு உற்றான், உறவினை, அன்றி வேண்டாதவன் என்று எண்ணாமல் செய்யவேண்டிய செயலுக்கு உண்டான பொருளை (கருவி, செல்வம்), செயலுக்கு வேண்டிய கல்வியறிவு நிரம்பியவனிடத்தில் செயலை ஒப்படைத்துவிடுக. அவன் செயல் செய்தல் பொருட்டு மற்ற வல்லுனர்களிடம் கேட்காமல் போனாலும்  குற்றமில்லை; காரியத்தைக் கருத்தாக முடித்துவிடுவார். காளை உப்பு உண்டாலும் பயன் கொடாது போகாது இல்லையா. கொள்ளுக்கு உப்பிட்டுக் கொடுத்தால், காளை நோயின்றி தலைவனுக்கு வேலைசெய்யும் என்பதை இதில் கூறப்பட்டுள்ள பழமொழி கூறுகிறது.

இன்றெனது குறள்:

எவ்வினையை எவ்வழியால் யார்செய்கும் என்றாய்ந்து
அவ்வினையை அவ்வாற்றான் ஆற்று

evvinaiyai evvazhiyAl yArseigum enRAindhu
avvinaiyai avvARRAn ARRu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...