ஜூன் 18, 2013

குறளின் குரல் - 427


18th June 2013

நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராதல் அரிது.
                         (குறள் 419: கேள்வி அதிகாரம்)

Transliteration:
nuNangiya kELviya rallAr vaNangiya
vAyina rAdhal aridhu

nuNangiya – refined and exquisite
kELviyar allAr – not having such (nuNangiya) listening
vaNangiya – modest, humble
vAyinar Adhal – having a sober, restrained, moderate mouth to speak
aridhu – rare

There is no better jewel or decoration for someone  other than being humble and having sweet speak! vaLLuvar has so said earlier in the Canto of Virtues “Sweet Speak” chapter. Only for people of modest ways and humility will there be a pleasant manners in speech; that comes out of learning refined knowledge from listening to wisemen.

Being humble in speech is one of the most insisted virtue. Sambandhar has said, “paNivAyuLLa nakezhu nAviR bhakathargaL” in his ThevAram. Kamban also says about vibhIshaNan as somebody with refined knowledge – “nuNangiya kELviyan nuvalvadhAyinan”.

Without refined and exquisite listening to wise and learned
It is rare to find a person of modesty and mouth restrained

தமிழிலே:
நுணங்கிய - நுட்பமான அறிவினைத் தரக்கூடிய
கேள்வியர் அல்லார் - செவிச்செல்வமான கேள்வியறிவு இல்லாதாவர்கள்
வணங்கிய - பணிவுடன் கூடிய
வாயினர் ஆதல் - பேச்சினை உடையவர்கள் ஆகுதல்
அரிது - மிகவும் நடவாத ஒன்று

“பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவர்க்கு அணியல்ல மற்றுப் பிற” என்று அறத்துப்பாலில், இனியவை கூறல் அதிகாரத்தில் ஏற்கனவே படித்திருக்கிறோம். அந்த பணிவுடையராருக்கு இன்சொல் சொல்லக்கூடிய வணங்கும் தன்மையுள்ள பேச்சு இருக்கும். அப்பணிவுடமையும் நுண்ணிய கல்வியறிவினைக் கற்றறிந்தவர்கள் வாயிலாகக் கேட்டறிந்தவர்களுக்கே இருக்கும் - இதுவே இக்குறளின் பொருள்.

சம்பந்தர் தேவாரம், “பணிவாயுள்ள நன்கெழு நாவிற் பக்தர்கள்” என்பார் சம்பந்தப்பெருமானும். கம்பநாடனும் விபீடணரைப்பற்றிக்கூறும் போது, “நுணங்கிய கேள்வியன் நுவல்வதாயினான்” என்பார். நுணங்கிய கேள்வி என்பதை பல இடங்களில் சொல்லியுள்ளார் கம்பர்.

இன்றெனது குறள்:

பணிவுடைசொல் இல்லார்  செவிச்செல்வ நுட்பம்
அணியென இல்லா தவர்

paNivuDamichol illAr chivichchelva nuTpam
aNiyena illA dhavar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...