ஜூன் 17, 2013

குறளின் குரல் - 426


17th June 2013

கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி.
                         (குறள் 418: கேள்வி அதிகாரம்)

Transliteration:
kETpinung kELAth thagaiyavE kELviyAl
thOtkap paDAdha chevi

kETpinung – Even though they ears can listen (not deaf)
kELAth thagaiyavE – there are as bad as deaf ears (when)
kELviyAl- When by lisening to scholars words of wisdom, knowledge
thOtkap paDAdha – not pierced by (should be appended to kELviyAl)
chevi – those says one ear, should be construed as ears.

Just like the eyes of people that can not see what is worthy of seeing, are sore, (as said by vaLLuvar earlier), the ears of people that have not listened to the words of wisdom of erudition are but deaf ears. So says vaLLuvar.

The literary work of “irumbal kAnchi” likens such ears as the hold created by an arrow, which creates only a wound – similar thought to what vaLLuvar said earlier about eyes. Cheevaga ChinthAmaNi calls  them as hollow wooden ears. Kambar calls the people that have listened to wisemen speak, as ones who have nectar for their senses.

“Ears that have not listened to the words of wise
 Are none but deaf and like unworthy seeing eyes.”

தமிழிலே:
கேட்பினுங் - கேட்குந்தன்மை உடையனவானாலும்
கேளாத் தகையவே  - கேட்காத செவிட்டுத்தன்மை  உடையனவே
கேள்வியால் - வல்லோர் வாய்சொற்களை அறிந்து அறிவை கேள்வியால்
தோட்கப்படாத - துளைக்கப்படாத
செவி - காதுகளே தான்,

நல்லவற்றைக் காணாத கண்களிரண்டும் புண்களே என்று முன்பே சொல்லியபோல், இப்போது அறிவுச் செல்வத்தை கற்றறிந்தார் வாய்மொழியாக கேட்டறியாதவர்களின் காதுகள் செவிட்டுத்தன்மை உடைய காதுகள்தான் என்கிறார் வள்ளுவர்.

இரும்பல் காஞ்சி என்ற இலக்கியத்தில், “எய்கணை விழுத்துளை அன்றே செவித்துளை மையறு கேள்வி கேளாதோர்க்கே” எனப்படுகிறது.  சீவக சிந்தாமணி இன்னும் அழுத்தமாக, “இரும்பிற் போர்த்த பழுதெண்ணும் வன்மனத்தார் ஓட்டைமரச் செவியார்” என்கிறது. கம்பராமயாணப் சவரிப்படலத்தில் “தோட்டவர்” என்ற சொல்லைப் இதேகருத்தைச் சொல்லியிருக்கும் அழகையும் சற்று பார்ப்போம். “கேள்வியாற் செவிகள் முற்றும் தோட்டவர் உணர்வின் உண்ணும் அமுதத்தின் சுவையாய் நின்றான்” என்கிறார் கம்பர்.

இன்றெனது குறள்:
செவிச்செல்வம் கொள்ளாச் செவியுடையார் எல்லாம்
செவிடரென்றே சொல்லு முலகு

Chevichchelvam koLLAch cheviyuDaiyAr ellAm
CheviDarenRE sollu mulagu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...