16th June 2013
பிழைத் துணர்ந்தும் பேதைமை
சொல்லா ரிழைத்துணர்ந்
தீண்டிய
கேள்வி யவர்.
(குறள் 417: கேள்வி அதிகாரம்)
Transliteration:
Pizhath
thuNarndhum pEdhamai sollA rizhaiththuNarndh
dhInDiya
kELvi yavar
PizhaththuNarndhum – Even if misunderstood
pEdhamai – (word) showing self in idiocy
solar – will not say
izhaiththuNarndh(u) – knowing whatever knowledge needs to be understood
critically
InDiya – having over and above
kELviyavar – peopke of the power of listening
People that have gained knowledge by deep study, and
keen listening will not utter words foolishly, even if some of their understanding
of knowledge as consumed by them is wrong. The verse once again highlights the
mertis of listening. The beauty of keen listening is that without much effort,
the knowledge seeps into somebody’ system and makes them knowledgeable.
This can be seen in music learning environment,
where some times, more than the student that learns, there could be somebody
who is just listening, being a good musician.
In general, being in a learning environment, observing and listening to
lessons itself coul be beneficial. There is a popular adage, “kalviyil
periyan kamban” (Kamban is truly great in erudition), which is why there is
another adage is also in vogue, “kamban vITTuk kaTTuth thariyum kavi pADum”
(Even the weaving machine in Kamban’s household can compose poetry).
A person
of detailed learning and knowledge by keen listening
Won’t
utter words foolishly, even if faulty is, their understanding
பிழைத்துணர்ந்தும் - தவறாக புரிந்துகொண்டிருந்தாலும்
பேதைமை - தம்மை பேதமையில் காட்டும் சொற்களைச்
சொல்லார் - சொல்லமாட்டார்கள்
இழைத்துணர்ந்(து) - அறியவேண்டியவற்றை நுணுக்காமாக உணர்ந்து
ஈண்டிய - மேலும் கூடிய
கேள்வியவர் - கேள்வியறிவினை உடையவர்
மிகுந்த நுணுக்கமாக, அறியவேண்டியவற்றையெல்லாம் கற்று உணர்ந்து, மேலும், கேட்டுணர்ந்து கேள்வியால் கூடிய அறிவினர்,
சில நேரங்களில் குறைபட அறிந்திருந்தும், அவர்கள் பேசும்போது அதுவும் அவர்களது பேதமையை
வெளிப்படுத்தாது. அதாவது அவர்கள் பேச்சிலே அவர்களே அறியாமல் பொருள் பொதிந்தே இருக்கும்.
கேள்வியின் சிறப்பே கற்றலின் நேரம் ஒதுக்காமலே கூட, அறிவு தானாக நம்மை அடைவதுதான்.
இதை இசைக் கற்பிக்கப்படும் இடங்களில்கூட பார்க்கலாம்! சொல்லிக்கொடுக்காமலேயே,
ஒர் இசைச்சூழலில் வளரக்கூடிய சிலருக்கு இசைத் தானாகவே அவர்களிடத்தில் ஊறிவிடுகிறது.
கல்வி கற்பிக்கப்படும் இடங்களில் இருப்பவர்களும் கூட தாமாகவே சில செய்திகளை அறிந்திருப்பதை
பார்க்கலாம்.
“கல்வியில்
பெரியன் கம்பன்” என்ற வழக்கு இருப்பதினாலேதான், “கம்பன்
வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்” என்ற வழக்கும் வந்தது. இந்த வழக்கிலே காணவேண்டியது, அஃறிணைப் பொருளுக்கும் அறிவு இருக்கும், கற்றவர்களை
அணுகி இருந்தால் என்பதுதான்.
இன்றெனது குறள்:
நுண்ணிய கேள்விவல்லார் நன்றல்ல சொல்லாரே
எண்ணம் பிழைத்துணரி னும்
nuNNiya kELvivallAr
nanRalla sollArE
eNNam
pizhaiththuNar num
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam