ஜூன் 15, 2013

குறளின் குரல் - 424


15th June 2013

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்.
                         (குறள் 416: கேள்வி அதிகாரம்)

Transliteration:
enaththAnum nallavai kETka anaiththAnum
AnRa perumai tharum

enaththAnum – Even if it is only small extent
nallavai – of good subject
kETka – that someone listens to
anaiththAnum – to that extent
AnRa - Excellent
perumai tharum – gives pride

This verse also expresses a very simple thought. To the extent that one listens to scholarly speak, even it is only in small portion, it will give excellent pride to someone, who listens. The knowledge gained by listening, however small in measure, will only bring pride. This verse does not have much to expand on or explain about.

“To the extent, however small it is, listening,
 Will bring the pride and glory of glistening”

தமிழிலே:
எனைத்தானும் - சிறிதளவே ஆனாலும்
நல்லவை  - நல்ல பொருள்களைக் குறித்து
கேட்க  - கேட்டறிந்து கொண்டால்
அனைத்தானும் - அந்த அளவிலாது
ஆன்ற - மிக்க
பெருமை தரும் - பெருமையினைத் தரும்.

இக்குறளும் ஓர் எளிய பொருளைச் சொல்வதுதான். எந்த அளவுக்கு ஒருவர் நல்லவற்றைக் கேட்டு அறிகிறாரோ அந்த அளவுக்கு அவருக்கு மிக்க பெருமையினைத் தரக்கூடியதாம் கேள்வியினால் வரும் அறிவு. எவ்வளவுத்தான் சிறியது என்றாலும் கேள்வியினால் பெறப்படும் அறிவு பெருமையினைக் கொண்டு சேர்க்கும். விரித்துக்கூற ஏதுமில்லாத, விளக்கம் மேலும் தேவையில்லாத எளிய குறள்.

இன்றெனது குறள்:

நற்பொருளை கேட்டல் சிறிதளவே ஆயினும்
பொற்பாய் சிறப்பைத் தரும்

naRporuLai kETTal siRidhaLavE Ayinum
poRpAi siRappaith tharum

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...