14th June 2013
இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்.
(குறள் 415: கேள்வி அதிகாரம்)
Transliteration:
izhukkal
uDaiyuzhi URRukkOl aRRE
ozhukka
muDaiyArvAich chol
izhukkal - slipping
uDaiyuzhi – when it happens to someone
URRukkOl aRRE – is
like a helping staff (will help the slip of tongue)
ozhukkamuDaiyAr – qualified learned persons
vAichchol – scholarly words out of their mouth
This verse establishes an argument without making it
sound like one. Why must one listen to the scholarly words of learned? For
everyone atleast a few slips are very likely in their lives, both physical as
well as that of words. Having listened to great scholars speak, gives many tips
that come as great help during such times like a staff helps during physical
slips.
Repetitive istening, whether casual or serious, has
the effect of the process of osmosis, a gradual absorption. Such absorption
will surface during the times of slips surprisingly. This is exactly what the
verse suggests and insists
“Listening
to learned has many tips
That are
of utmost help during slips”
தமிழிலே:
இழுக்கல் - வழுக்குதல்
உடையுழி - ஒருவருக்கு அவ்வாறு (சொற்களில் வழுக்கல், சறுக்குதல்) நேரும்போது
ஊற்றுக்கோல் அற்றே - உதவுகின்ற ஊன்றுக்கோலைப் போன்றதாம்
ஒழுக்கமுடையார் - கல்வி ஒழுக்கமுடையார்
வாய்ச்சொல் - வாயிலிருந்து வருகின்ற
அறிவார்ந்த சொற்களைப் போலாம்
இக்குறள் ஒரு வலிமையான வாதத்தினை, அது அவ்வாறாகத் தெரியாவண்ணம்
முன் வைக்கிறது. ஒருவர் ஏன் கற்றறிந்தார் பேசுபவற்றைக் கேட்கவேண்டும்? வாழ்க்கையில்
சறுக்கி, வழுக்கித் தவறி விழுவது, பௌதீக ரீதியிலோ, செய்யும் செயல்களிலோ, எல்லோருக்கும்
நடக்கக்கூடியதுதான். பெரிய அறிஞர்கள் பேச்சினையெல்லாம் கேட்டு வாழ்பவர்களுக்கு, அத்தகைய
வழுக்கல்களோ, சறுக்கல்களோ சவால்களாயினும், மிகவும் அழகாக அவற்றிலிருந்து மீளவோ, தப்பிக்கவோ
முடியும்.
மீண்டும் மீண்டும் கற்றவர்கள் பேச்சுக்களையே கேட்டு வளர்ந்தவர்களுக்கும்,
வாழ்பவர்களுக்கும் அவர்கள் அறியாமலே அறிவு துளித்துளியாக அவர்களது அறிவில் ஊறி அமர்ந்துவிடுகிறது. அவ்வாறு ஊறிய அறிவு, தகுந்த நேரங்களில், குறிப்பாக
சிந்தனையிலோ செயலிலோ வழுக்கும் போதும், தவறி விழுகிறபோதும், நம்மை விழாமலோ, விழுந்தாலும்
அவற்றால் மிகுந்த பாதிப்பை அடைதலில்லாமலும், பாதிக்கப்பட்டாலும் அதைப் பாராட்டி வருந்தாத
மனநிலையினயும் தருவது,
இன்றெனது குறள்:
கற்றறிந்தார் சொற்களைக் கேட்டல் உதவிடுமே
உற்றநேரத் தூன்றுகோலைப் போல்
kaRRaRindhAr soRkaLaik kETTal udhaviDumE
uRRawEran thUnRukOlaip pOl
மூலக்குறளின் சொற்களையொட்டியே முதலில் எழுதப்பட்ட குறள்.
ஒழுக்கம் நிறைந்தார்சொல் கேட்டல் உதவும்
வழுக்கிடின் ஊன்றுகோலைப் போல்
ozhukkam niRaindhArsol kETTal
udhavum
vazhukkiDin UnRukOlaip pOl
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam