ஜூன் 13, 2013

குறளின் குரல் - 422


13th June 2013

கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாந் துணை.
                         (குறள் 414: கேள்வி அதிகாரம்)

Transliteration:
kaRRila nAyinung kETka agdhoruvaRku
oRkaththin URRAndh thuNai

kaRRilan Ayinung – Even if one is not learned
kETka – one must have listened to scholarly talks
agdhoruvaRku – that itself for someone
oRkaththin – when they are weak due to adversity
URRAndh – it is like fresh water spring (the knowledge gained by listening)
thuNai – and comes to rescue.

If someone is not able to read and learn from books, the knowledge gained by listening to scholarly people will come to rescue and help during the times of need and feel helpless.

Listening is better than learning” is a adage which has been mentioned earlier too. One of the most respected grammar works, ‘nannUl” places listening as the primary tool for learning. In our old schooling systems that has produced copious amount of knowledge and literary works, the main method of teaching was by making students listen and discuss to better assimilate material taught.

A student must goto a qualified teacher and must listen to him teach lessons. The word “kELvi” also means, questioning, listening, discussing, and asking questions to learn are part of integrated system of learning. A nAlaDiyAr verse says, “nAppADam solli nayam uNarivAr” stressing the importance of listening to lessons.

Now the word “urai” has come to mean commentary, but the very word itself means, “to say”. This refers to the oral tradition of teaching. The Lord of Madurai wrote a work, which was taught to Nakkeerar, who in turn was taught to koRRanAr. The chain continued to thEnur kizhAr, paDiyang koRRanAr, maNulUr AsAn perunj chAththanAr, AnDai perung kumAranAr, thirukkunrAththu Asiriyar, iLanAganAr, nIlakaNDanAr. The Tamil verse repeats the word “uraiththAr” throughout the chain emphasizing the oral tradition. Of course writing in palm leaves and preserving them would have been an arduous task understandably too and hence probably reliance of oral tradition.

“The gift of listening to scholars is like a spring
 During the times of weakenss, adversities bring”

தமிழிலே:

கற்றிலனாயினுங் - ஒருவர் முறையாக அமர்ந்து கற்கவேண்டிய் நூற்களைக் கற்காவிடினும்
கேட்க - கற்றவரிடம் பொருந்தி கேட்டறிதல் வேண்டும்
அஃதொருவற்கு - அவ்வாறு கேட்டறியும் அறிவு
ஒற்கத்தின் - தளர்வுற்ற காலத்திலே
ஊற்றாந் - பொங்கி வரும் ஊற்றினைப் போல்,
துணை - துணையாகி விடும்

ஒருவருக்குக் கற்கவேண்டுவனற்றை நூல்வழி நின்று கற்க முடியாமல் போனாலும், கற்றறிந்தவர்களை அடுத்து, கேட்டறிதல் சிறந்தது. அவ்வாறு கேட்டறிந்த அறிவு, தளர்வுற்ற நேரங்களில், பொங்கிவரும் ஊற்றுபோலே பெருக்கடுத்து நமக்குத் துணையாக நிற்கும்.

“கற்றலின் கேட்டலே நன்று” என்னும் பழமொழி, நூலறிவைவிட கேட்டறிதலே சிறந்தது என்கிறது. நன்னூல் சூத்திரம், கற்றலையே கேட்டலை முன்னிருத்திச் சொல்கிறது. நமது பழைய கற்றல் முறையிலே, “பாடம் சொல்லுதல்” என்ற வழக்கம் உண்டு. தகுந்த ஆசிரியரை அடுத்து ஒருமாணவன் அவர் சொல்லும் பாடங்களை கேட்டு அறிதல் வேண்டும். கேள்வி என்பதில், கேட்பதும் கேள்வி கேட்பது அடங்குவதால், கலந்துரையாடி, கேள்வி-பதில் என்னும் முறையிலே அறிவது சிறந்ததாகவும் கருதப்பட்டு வந்துள்ளது. நாலடியார் பாடல் வரி ஒன்று, “நாப்பாடம் சொல்லி நயம் உணர்வார்” என்கிறது. இப்போது முன்னே சொன்ன நன்னூல் பாடல் இதோ.

நூல்பயில் இயல்பே நுவலின் வழக்குஅறிதல்        
பாடம் போற்றல், கேட்டவை நினைத்தல்
ஆசாற் சார்ந்துஅவை அமைவரக் கேட்டல்
அம்மாண் புடையோர் தம்மொடு பயிறல்,
வினாதல் வினாயவை விடுத்தல் என்றுஇவை
        
கடனாக் கொளினே மடம்நனி இகக்கும்.

இப்போது உரை என்ற சொல் எழுதிய விளக்கத்துக்கு ஆகிவிட்டாலும், அதன் பொருளென்னாவோ உரைத்தல், அதாவது சொல்லுதல் என்பதுதான். ஆலவாய் அண்ணல் செய்த நூலுக்கு, நக்கீர வழியாக உரை வந்த வரலாற்றை இப்படிக்கூறுவர்.

மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் தம் மகனார் கீரங் 
கொற்றனார்க்கு உரைத்தார்; அவர் தேனூர் கிழார்க்கு உரைத்தார்; அவர் 
படியங் கொற்றனார்க்கு உரைத்தார்; அவர் மணுலூர் ஆசிரியர் புளியங்காய்ப் 
பெருஞ் சேந்தனார்க்கு உரைத்தார்; அவர் செல்லூர் ஆசிரியர் ஆண்டைப் 
பெருங் குமாரனார்க்கு உரைத்தார்; அவர் திருக்குன்றத்து ஆசிரியர்க்கு 
உரைத்தார்; அவர் மாதவனார் இள நாகனார்க்கு உரைத்தார்; அவர் முசிறி 
ஆசிரியர் நீலகண்டனார்க்கு உரைத்தார்.

செவிவழி கேட்பதை, முதலாய கற்பிக்கும், கற்கும் முறையாகக் கொண்ட காலம் மலையேறிவிட்டது.

இன்றெனது குறள்:

தளர்வுற்ற போதெல்லாம் பூக்குமூற்றாய் கேள்வி
உளத்தினில் கற்றிலார்க் கும்

thaLarvuRRa pOdhellAm pUkkumURRAi kELvi
uLAththinil kaRRilArk kum

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...