ஜூன் 12, 2013

குறளின் குரல் - 421


12th June 2013

செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து.
                         (குறள் 413: கேள்வி அதிகாரம்)

Transliteration:
seviyuNaviR kELvi uDaiyAr aviyuNAvin
AnRArO Doppar nilaththu

seviyuNaviR – Food for ears
kELvi uDaiyAr- people of such habit or training listening to knowledgeable people speak
aviyuNAvin – sacrificial oblations consuming
AnRArOD(u) – heavenly beings
oppar nilaththu – placed equal to on this earth

Among all the wealth that one can attain none compares to the knowledge attained by listening. The food for thought that knowledge is, , when consumed by ears, through the words of scholarly, such blessing is being equal to heavenly bodies that consume the oblations givens during sacrificial fire on this earth.

A different thought is placd by ParidhiyAr, another commentator. If one were to ask how the the knowledge attained in earth by listenin will place equal to earthly beings, the answer is right there in the verse; it is like the oblations offered on earth go to heavenly beings

Kambar says that the knowledge by listening is sweeter than the life saving medicine that nectar is.

“Those consume by listening, the food for thought
 Are like sacrificial oblations accepting heavenly sort”

தமிழிலே:
செவியுணவிற் - காதுகளுக்கு உணவாகிய
கேள்வியுடையார் - நல்லறிவை கற்றோர் மொழிய கேட்டறிவோர்
அவியுணவின் - வேள்விகளில் சொறிந்து படைக்கப்படும் உணவைக் கொள்ளும்
ஆன்றாரோ(டு) - வானோரோடு
ஒப்பர் நிலத்து - ஒப்பராம் இந்த உலகின்கண்

பெறத்தக்க செல்வங்களில் சிறந்தது நல்லறிவை காதுகளால் கேட்டு அறிவதுதான்.  அறிவையே உணவாக்கி அதை கற்றோர் கூறக்கேட்டு காதுகளின் வழியாக அறிவுப்பசிக்கு அளிக்கப்படும் உணவாகக் கொள்ளும் பழக்கமுடையோர், வேள்விகளில்  உணவாகப் படைக்கப்படுவதைக் கொள்ளும் வானோர்க்கு ஒப்பாவராம்.

சற்றே மாறுபட்ட சிந்தனையை பரிதியார் முன்வைக்கிறார். மாநிலத்தே கொள்ளும் கேள்வியறிவு எப்படி வானோர்க்கு ஒப்பாக வைக்கும் என்பதைக் கேள்வியாகக் கொண்டு, எப்படி மாநிலத்து இடும் அவிசானது வானோர்க்குச் செல்லுமோ, அதுபோல என்கிறார் பரிதியார் தன்னுரையில்.

கம்பர் நாட்டுப்படலத்தில், “மருந்தினும் இனிய கேள்வி செவியுற மாந்துவாரும்” என்று கேள்வியை நோயறுக்கும் மருந்தைவிட சிறந்தது என்கிறார்.

இன்றெனது குறள்:

கேள்வி சிறந்த பெரியோர்கள் மாநிலத்தே
வேள்வியூண் கொள்வானோர்க் கொப்பு

kELvi siRandha periyOrgaL mAnilaththE
vELviyUN koLvAnOrk koppu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...