11th June 2013
செவிக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்.
(குறள் 412: கேள்வி அதிகாரம்)
Transliteration:
sevikkuNa
villAdha pOzhdhu siRidhu
vayiRRukkum
Iyap paDum
sevikku – For ears
uNavillAdhapOzhdhu – when there is none to feed
siRidhu – a little bit
vayiRRukkum – the stomach can be
IyappaDum – taken care (given food)
The excellence of listening is stressed through this
verse. One must be filled with hunger for knowledge and learning by listening.
That hunger for knowledge is insatiable. The more we consume, the more it
grows. During the short durations that food for thought may not be available,
one can feed self to satiate the hunger of the stomach. This is the thought
expressed in this verse. The significance of listening that is truly a key to
learning is what vaLLuvar wants to point out.
Why should it be in “small” portions for the
physical stomach? If it the food becomes more, it brings only disease and
desires for the physical body. Hence the stress for the word, “siRidhu” in the
verse.
ThirumUlar, one of the
eighteen siddhaa’s saya, “uDambAl
azhiyin uyirAl azhivar, thiDampaDa meynjAnam sEravum mAttAr” – stressing
the proper care of physical body to acquire knowledge. But he also says, “uDambai vaLarkkum upAyam aRindhE”,
where “upAyam” means, a trick of
nurturing the body by feeding appropriately. May be vaLLuvar means that “upAyam” as “siRidhu”
“Little food to stomach must be brought
When
there is none by listening to thought”
தமிழிலே:
செவிக்கு - காதுகளுக்கு
உணவில்லாதபோழ்து - கேட்டு அறியக்கூடிய அறிவுச் செய்திகளாகிய உணவு
இல்லாத போது
சிறிது - சிறிதளவு
வயிற்றுக்கும் - உடலை வளர்க்கக் காராணமான வயிற்றுக்கும்
ஈயப்படும் - உணவைக் கொடுக்கலாம்.
கேட்டலின் சிறப்பை இன்னும்
வலிந்து சொல்லும் குறள் இது. ஒருவர் அறிவுப்பசி கொண்டு, கேட்டு அறிந்துகொள்ளுவதில்
முனைந்திருக்கவேண்டும். அப்பசியானது தீராததது. கொள்ளக் கொள்ள மேலும் செரிக்கக்கூடியது.
அச்செவியாகிய புலனுக்கு தேவையான அறிவாகிய ஊணானது, மேலும் கிடைக்காமலிருக்கும் போது,
அதாவது அதில் சிறிது இடைவெளி ஏற்பாடுமானல் வேண்டுமானாலும், உடலைச் சார்ந்த வயிற்றுப்பசியைப்
போக்குவதற்கு உணவைக் கொள்ளாலாம், என்பதே இக்குறள் சொல்லும் கருத்து.
வயிற்றுக்கு ஈயப்படும் உணவு
“சிறிது” என்றது, அதிகமாயின், நோயும், காமமும் பெருகுதலால்,
என்கிறார் பரிமேலழகர்.
காமம் என்பது “இச்சை” என்பதனால், உடம்பை வளர்க்க இச்சைகளே வளரும், அறிவு வளராது என்பதனால்
“சிறிது” என்ற சொல் அழுத்தம் பெறுகிறது.
ஆனால் திருமூலர், உடம்பைப் பேணுதலினை முக்கியமாகச் சொல்லுகிற இப்பாடலைப் பார்ப்போம்.
‘‘உடம்பாற் அழியின் உயிரால்
அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவு
மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம்
அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே!
இப்பாடலில் “சுவரை வைத்துத்தான்
சித்திரம் எழுதவேண்டும்” என்கிற பழமொழிக்கேற்ப, உடம்பைப் பேணுதலை வலியுறுத்துகிறார். உடம்பால் அழியின், உயிரால் அழிந்து, திடம்பட மெய்ஞானம்
சேரவும் மாட்டார்” என்று சொல்லி, கூடவே உடம்பை வளர்பது ஒரு உபாயம் என்கிறார். அந்த உபாயம்தான் வள்ளுவர் “சிறிது” என்பதோ? மற்றொரு
பழமொழி, “உதியம் பெருத்தால் உத்திரத்துக்குக்கூட ஆகாது, சரீரம் பெருத்தாலும் அது மாதிரிதான்”
என்று கூறுவதிலிருந்து, உடம்பை பெருக்காமால் திட்டமாக வைத்துக்கொள்வதே நல்லது தெரிகிறது.
இன்றெனது குறள்:
உடலுக்கூண் கொள்வீர் அறிவாமூண் காது
மடல்களுக்கு இல்லாத போது
uDalukkUN koLvIr aRivAmUN kAdhu
maDalgaLukku illAdha pOdhu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam