ஜூன் 10, 2013

குறளின் குரல் - 419


42:  (Listening- கேள்வி)
[Listening is a great tool for learning. More than reading it on own, when we listen to scholars explain or speak out a subject, the clarity of their thought will make a profound impact to the keen listener. Instead of pouring on a book, sometimes it is better to be explained by knowledgeable expert. For already learned, listening will reinforce their learning and for the uneducated also, it may help indirectly by making them learn]

10th June 2013

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை.
                         (குறள் 411: கேள்வி அதிகாரம்)

Transliteration:
chelvaththut chelvam sevichchelvam achchelvam
chelvaththuL ellAm thalai

chelvaththut – Among all the wealth that one can attain
chelvam – the best is
chevichchelvam – the gift of listening to assimilate knowledge
achchelvam – that gift, wealth
chelvaththuL ellAm – is among all the other external life related wealth
thalai – is the primary among them

Learning by listening is better than reading. Unlike in any other culture, in Indian subcontinent, story-telling format has been in existence for long. Harikatha, religious, and literary discourses have been in vogue for many centuries to reach the basic tenets of life through the stories from Ithihasas, purANAs or other literary works. This has been effective in setting the commoners in virtous path.

Hence it is said that listening is an effective tool to grasp knowledge more than reading. What a pair of eyes on their own do with utmost focus and concentration, ears do it very easily, especially when somebody else speaks. The most abstract among all art forms is music, which can be taught by only listening and assimilating. Vedas, known to be “Shruthi” have been passed over generation by oral traditions for the reasons of accuracy and effectiveness of learning.

Among all wealth there is, that which is the best
Is the wealth of listening as it is the foremost”

தமிழிலே:
செல்வத்துட் -  கிடைத்தற்கரிய செல்வங்களும்
செல்வஞ் - சிறந்த செல்வமெனப்படுவது
செவிச்செல்வம் - கேட்டு அறிந்துகொள்வதால் பெறக்கூடிய அறிவுச் செல்வம்
அச்செல்வம் - அச்செல்வமானது
செல்வத்துளெல்லாந் - மற்ற செல்வங்கள் என்று நாம் கருதுகிற புற வாழ்க்கை வசதிகளைவிட
தலை - சிறந்தது, முதலாயது

கற்றலின் கேட்டலே நன்று என்ற வழக்குமொழியொன்று உண்டு, மற்றெந்த கலாச்சாரத்திலும் இல்லாத கதைச்சொல்லிப் பாரம்பரியம் நமது நாட்டிலே உண்டு. பாரத நாடு முழுவதும், ஹரிகதை, இலக்கியச் சொற்பொழிவுகள் என்று வாழ்க்கை உண்மைகள் புராண, இதிகாச, சரித்திரக்கதைகள் வாயிலாக மக்களுக்குச் சொல்லிவந்திருப்பதாலே, அடிப்படை ஒழுக்க உணர்வினை நம் நாட்டுமக்களுக்குப் புகுத்திவந்திருக்கிறார்கள்.

அதனாலேயே கேட்டல் என்பது அறிவு சார்ந்த செய்திகளை, படித்து, புரிந்துகொள்வதைவிட மிகவும் எளிதாகச் சாதிக்கிறது. கண்கள் பதிவு செய்வதைவிட காதில் விழும் ஒலிவடிவங்கள் மூளையை மிகவும் எளிதாக அடைகின்றன. கலைகளிலே மிகவும் கடினமான, சொற்களில் எழுதி, சொல்லி விளக்கமுடியாத இசைக்கலைக்கூட ஒலிவடிவமாகவே அறியப்படுகிறது, கற்கப்படுகிறது, சுருதி என்று அழைக்கப்படும் வேதமானது, எழுதாக்கிளவி எனப்படும். ஆயிரக்கணக்கான வருடங்களாகச் செவிவழியான கேள்வி மரபிலேயே பல சந்ததியினர்களைத்தாண்டி, இன்னும் பாதுக்காக்கப்பட்டுவருவதும் கூட இதனால்தான்.

இன்றெனது குறள்:

திருவிற் சிறந்தது கேள்வியாம் மற்றத்
திருவது முற்றாய் முதல்

thiruviR chiRandhadhu kELviyAm maRRath
thiruvadhu muRRAi mudhal

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...