9th Jun 2013
விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்.
(குறள் 410: கல்வி அதிகாரம்)
TransliterationL
vilangoDu
makkaL ananiyar ilangunUl
kaRRArODu
Enai yavar
vilangoDu – Compared to an animal
makkaL – humans have the benefit of six sense and hence
are better positioned
ananiyar – such people
ilangunUl – Best books of knowledge
kaRRArODu – those who have studied them
Enaiyavar – when we compared others who are have studied such
scholarly books.
The order of comparison
is not right in this verse. It is acceptable to compare animals to uneducated
as they are compared to beings of five senses; and so is the comparison of
scholars to people of sixth sense. But reading the verse as is, clearly
indicates that order has been not done properly. It is difficult to think that
vaLLuvar would have made such an obvious mistake in the comparison order.
Another keen look at
the verse reveals that the intended meaning is probably different. Those who
are scholars and well read are free of bondage of life and mind and become
truly realized souls, while people that have not read the books of knowledge
will stay forever bound in the earthly life of bondage, unwisely.
Though there are many
examples comparing animals to uneducated in literary works, the comparison
order or the context would be appropriate.
“Bondage of life is not there for educated and scholarly
Others suffer such handcuff
for thier life are, unwisely”
தமிழிலே:
விலங்கொடு - ஐந்தறிவு விலங்குகளைப் ஒப்பிடுகையில்
மக்கள் - ஆறறிவு உடைய மனிதர்கள் எப்படி மேம்பட்டவர்களோ
அனையர் - அதே போல்
இலங்குநூல் - கற்கத்
தகுந்த நூல்களைக்
கற்றாரோடு - கற்றறிந்தவர்களோடு ஒப்பு நோக்குகையில்
ஏனையவர் - கல்லாதவர்கள் கீழ்பட்டவர்கள்
இக்குறளின் ஒப்புமை முறைமை
பொருத்தமாக இல்லை. விலங்குகளைக் கல்லாரோடு ஒப்பிட்டு, மக்கள் எனப்படுவோர் விளங்குகின்ற
நூலறிவு உடையவர்கள் என்று சொன்னவரைக்கும் சரிதான். ஆனால் வரிசைமுறையில் குறளைப்படிக்கும்
போது அதற்கு எதிர்மாறாகக் கூறப்பட்டுள்ளது. இவ்வாறே எல்லோருமே உரையாக்கியிருக்கிறார்கள். வள்ளுவர் தவறான வரிசைமுறையிலே சொல்லியிருப்பாரா
என்பது ஐயுறத்தக்கதாம்.
சற்று கூர்ந்து படித்தால்,
பொருளை இப்படிக்கொள்ளலாம். விளங்கும் அறிவு நூல்களைக் கற்றுணர்ந்தாரோடு நோக்கினால்,
விலங்கொடு மக்கள் அனையர் ஏனையவர் என்று ஆகும். மற்றவர்கள் தளைபட்டு நிற்கின்ற கைதிகளைப்போல்வர்.
அறிவு என்பது மனதை விடுதலைப்பெறச் செய்யும், உண்மையான ஆத்ம விடுதலையைத் தரும். கல்வியின்மையோ
உலகமென்னும் பெருந்தளையைப் பூட்டி நம்மை முற்றிலுமான அறிவைச்சார்ந்த விடுதலையைப் பெறச்செய்யாமல்
ஆக்கிவிடும்.
கல்லாதவரை விலங்குகளுக்கு
ஒப்பாகக் கூறிய எடுத்துக்காட்டுக்கள் இலக்கியங்களில் இருந்தாலும், இக்குறள் அதைச் சொல்லவில்லை
என்றே கருதமுடிகிறது.
இன்றெனது குறள்(கள்):
நூலறிவு அற்றோர் விலங்குபோல்வர் - கல்வியறி
சீலரே மக்களா வர்
nUlaRivu aRROr vilangupOlvar –
kalviyaRi
sIlarE makkaLA var
மாற்றுக்கருத்துக்கான குறளிது.
கல்லார் தளைபட்டு நிற்கின்றார் - கற்றுணர்ந்தார்
எல்லாம் களைந்திட் டவர்
kallAr thaLaipattu niRkinRAr –
kaRRuNarndhAr
ellAm kaLandhit tavar
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam