ஜூன் 08, 2013

குறளின் குரல் - 417


8th Jun 2013

மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு.
                         (குறள் 409: கல்வி அதிகாரம்)

Transliteration:
mERpiRandhAyinum kallAdhAr kIzhpiRandhum
kaRRAr anaiththilar pADu.

mERpiRandhAyinum – though born in the noble caste
kallAdhAr - uneducated
kIzhpiRandhum – born in lower caste
kaRRAr – the educated ones, in comparison
anaiththilar – don’t measure up
pADu – in their grace of learning

This verse says, though born in higher caste, uneducated, when compared to the educated born in lower case is, inferior in glory. Even the adage that “kulaththaLavE  AgumAm guNam” is proved to be false by this verse irrefutably.

It is glory for the erudite wherever they go; the caste and the higher societal status of well being are not the measuring barriers for anything or differentiating excellence of anybody. Only erudition is the yard stick.

This same though is expressed by nAlaDiyAr, saying even the salt out of wasteland is better than paddy grains from good land. Though salt is not more valuable compared to paddy grains, It may be borne out of the saying “uppillAp paNDam kuppaiyilE”, giving prominence to salt over anything.

Another verse from nAnmaNikkaDigai says, even it is the same flame a flame from a lamp is worshipped where as that from fire from other places.

“Lower in comparison, though born in noble caste,
 The uneducated, to the erudite born in lower caste”

தமிழிலே:
மேற்பிறந்தாராயினும் - உயர்குடியிலே பிறந்தவராயினும்
கல்லாதார் - கல்வி கல்லாதவர்கள்
கீழ்ப்பிறந்தும் - தாழ்ந்த குடியிலே பிறந்த
கற்றார் - கற்றவர்களோடு ஒப்பிடும் போது,
அனைத்திலர் - அளத்தற்குரிய அளவுக்கு இல்லாதார்
பாடு - பெருமை

உயர்குடியில் பிறந்திருந்தாலும், கல்வியறிவு இல்லாதவர்கள், தாழ்ந்த குடியிலே பிறந்தும் கற்றவர்களோடு, ஒப்பிடும்போது அளத்தற்குரிய பெருமை இல்லாதவர், என்பதே இக்குறளின் கருத்து. குலத்தளவே ஆகுமாம் குணம் என்கிற வாக்குகூட பொய்யாகிவிடுகிற கருத்தைச் சொல்லுகிறது.

கற்றோர்க்கே சென்றவிடமெல்லாம் சிறப்பு என்றிருக்கையில், அதில் குலம் என்னும் வேற்றுப்படுத்தும் அடையாளம் நிற்காது. புறநானூற்றுப்பாடல் வரிகள், “ வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும் கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவனும் அவன்கட்படுமே” என்பது கவனிக்கவேண்டிய கருத்து.

நாலடியார் பாடல் இக்கருத்தையொட்டி இவ்வாறு கூறுகிறது.

களர்நிலத் துப்பிறந்த உப்பினைச் சான்றோர்

விளைநிலத்து நெல்லின் விழுமிதாக் கொள்வர்;

கடைநிலத்தோ ராயினுங் கற்றறிந் தோரைத்

தலைநிலத்து வைக்கப் படும்.

களர்நிலத்து உப்பை தாழ்குடியில் பிறந்த கற்றோருக்கும், விளைநிலத்து நெல்லை உயர்குடி பிறந்த கல்லார்க்கும் உவமையாகக் கூறப்பட்ட பாடல் இது.  மற்றொரு பாடல், நான்மணிக்கடிகையிலிருந்து.

திரியழல் காணின் தொழுப; விறகின்
எரியழல் காணின் இகழ்ப; ஒருகுடியில்
கல்லாது மூத்தானைக் கைவிட்டு கற்றான்
இளமை பாராட்டும் உலகு

கருத்து அதே கருத்து, சொல்லியவிதம் வேறு. எரியும் திரியைக் கண்டால் வணங்குவர். விறகு பற்றி எரிந்தால் வணங்கமாட்டார். ஒரே குடியில் பிறந்தவனாக இருப்பினும், படிக்காத மூத்தவனைப் பாராட்டமாட்டார்; படித்த இளையவனைப் பாராட்டுவர்.

இன்றெனது குறள்:

கல்லார் உயர்குடித் தோன்றினும் கற்றார்முன்
நில்லார் அளந்திடுங் கால்

kallAr uyarkuDI thOnRinum kaRRArmun
nillAr aLandhiDung kAl

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...