ஜூன் 07, 2013

குறளின் குரல் - 416


7th Jun 2013

நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு.
                         (குறள் 408: கல்வி அதிகாரம்)

Transliteration:
nallArkaN patta vaRumaiyin innAdhE
kallArkaN patta thiru
nallArkaN patta – What good people have in terms
vaRumaiyin - poverty
innAdhE – worse and painful than that is
kallArkaN patta – what uneducated have as
thiru - wealth

Worse than the poverty of good people is wealth in the hands of uneducated, is the thought of this verse. We might ask what kind of a comparison this is! Poetess AuvayyAr, said, “koDidhu koDidhu vaRumai kOdidhu”, (Painful, Painful Poverty is Painful) because for everyone poverty is painful.

When a good person is poor, it is painful for the sufferer as well as people that see. The wealth in the hands of uneducated, will go to wrong hands and diminish; they don’t have the means or intellect to safeguard what they have, nor multiply, nor make it useful for self or others; such state is painful for uneducated and even worse is that their wealth may be inadvertently be put to bad use to cause harm to others.

“The suffering of poverty of good people is painful
 Worse is the wealth of uneducated that is dreadful”

தமிழிலே:
நல்லார்கண் பட்ட  - நல்லவர்களிடத்தில் இருக்கும்
வறுமையின் - வறுமையை விட
இன்னாதே - துன்பத்தைத் தருவது
கல்லார்கண் பட்ட - கல்லாத மூடர்களின்  இடத்தில் இருக்கும்
திரு - செல்வம்

நல்லவர்களிடம் இருக்கும் வறுமையைவிட கொடிய துன்பம் கல்லாதவர்களிடம் உள்ள செல்வமென்கிறது இக்குறள். இது என்ன ஒப்புமை என்று கேட்கத்தோன்றும்.  கொடிது கொடிது வறுமை கொடிது என்றார் ஔவையார். நல்லோர்க்கும் அல்லோர்க்கும் அது கொடியதே.

நல்லோர்க்கு இருக்கும் வறுமையைக் காணும்போது, அது பிறருக்கும் வருத்தம் தருவதுதான். ஆனால் கல்லாத மூடர்களிடம் இருக்கும் செல்வம் செல்லாத இடங்களுக்குச் சென்று சீரழிவதால், செல்வத்தைக் கட்டிக்க்காக்கவோ, பெருக்கவோ, தமக்கும் பிறருக்கும் பயனுள்ள வழிகளில் செலவழிப்பதற்கோ ஏற்ற கல்வியறிவில்லாதவர்களிடம் உள்ள செல்வம் அவருக்கு துன்பமே தரும்.

இன்றெனது குறள்:

கல்லார்கைச் செல்வம்போல் அல்லலில்லை! இல்லையே
நல்லோர்க்கு அல்கலிலும் இல்  (அல்லல் - துன்பம்; அல்கல் - வறுமை)

kallArkaich chelvampOl allalillai illaiyE
nallOrkku algalilum il 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...