ஜூன் 06, 2013

குறளின் குரல் - 415


6th Jun 2013

நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை யற்று.
                         (குறள் 407: கல்வி அதிகாரம்)

Transliteration:
nuNmAN nuzhaipulam illAn ezhilnalam
maNmAN punaipAvai yaRRu

nuNmAN – intricate knowledge captured in books of knowledge
nuzhaipulam – poured into reading such books
illAn – one who does not have such scholarship
ezhilnalam – the external beauty
maNmAN – best of the clay
punaipAvaiyaRRu – a doll made out of (clay)

This verse is yet another often used verse by the writers and speakers alike. A person who has is not studied the books that are knowledge resources to teach intricate subject matters is like a beautiful doll made out of clay, a thing of beauty without any use. The doll is just the pride of the creator, and is not that of the doll itself. Beautiful things made are for show and have no other value on their own other than the value attributed to the creators of them.

The works of sangam anothoolgy of padhineNkIzhkaNakku nAlaDiyAr, siRupanchamUlam and ElAdhi, all have ample references to the same thought expressed in them. Especially the works of siRupanchamUlam and ElAdhi have similar sound verses which also have similar word usages. Who knows who copied from whom? In this case, even assuming one copied from the other, it is evident both must have been erudite scholars – May be one had originality and the other one had the intellect to write a similar sounding one!

“Without the deep study of scholarly books, an ignoramus
 Is like a beautiful doll made out of clay, none but pompous”

தமிழிலே:
நுண்மாண் - மிகவும் கூர்ந்து அறியத்தக்கதான மதிக்கப்படும் நூலறிவை
நுழைபுலம் - சென்று அறிந்துகொண்ட அறிவை
இல்லான் - இல்லாத கல்லாதவர்களுடைய
எழில்நலம் - அழகுகொஞ்சும் வெளித்தோற்றம்
மண்மாண் - மண்சுதையால் சிறப்புடன்
புனைபாவையற்று - ஆக்கப்பட்ட அழகான பொம்மை போன்றது (ஆக்கியவனுக்குப் பெருமையே தவிர பொம்மைக்கென்ன தனிப்பட்ட பெருமை இருக்கிறது)

கல்லாமையைப்பற்றிப் பேசுபவர்களும், எழுதுபவர்களும் மேற்கோளாகக் காட்டும் குறளிது.  நுணுக்கமான, பெருமைதரும் அறிவை தரக்கூடிய நூல்களைக் கற்காதவர்கள், சிறப்பான மண்சுதையால் ஆக்கப்பட்ட மண்பாவையைப் போன்றதாம். அழகுமிக்கதாக இருப்பினும், அதை ஆக்கியோனுக்குப் பெருமையே அன்றி ஆக்கப்பட்ட பொம்மைக்கு என்ன தனிப்பட்ட பெருமையிருக்கிறது?  காட்சிப்பொருளாக இருப்பதில்லாமல் செய்யப்பட்ட அழகுக்கென்று ஒரு பெருமையுமில்லை.

நாலடியார் பாடல் ஒன்று புற அழகு அழகல்ல என்றும் கல்வியே அழகென்று கூறுகிறது:

“குஞ்சியழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவுநிலைமையால்
கல்வி அழகே அழகு.” (நாலடியார் 131)

சிறுபஞ்சமூலம், சங்ககாலத்தையொட்டிய பதினெண்கீழ்கணக்கின் படைப்பு, இக்குறளை அடியொட்டியிடும் பாடலிது:

மயிர்வனப்பும் கண்கவரும் மார்பின் வனப்பும்
உகிர்வனப்பும் காதின் வனப்பும் செயிர்தீர்ந்த
பல்லின் வனப்பும் வனப்பல்ல, நூற்கியைந்த
சொல்லின் வனப்பே வனப்பு (சிறுபஞ்சமூலம் 36)

எளிமையான சொற்களின் அமைப்பில் சொல்லப்பட்ட இப்பாடலே கல்வி தரும் வனப்பைச்சொல்லி, நூலறிவின்மையை வனப்பல்ல என்கிறது.

மற்றொரு கீழ்கணக்கு நூலான ஏலாதியிலும் இக்கருத்து சொல்லப்படுவதைப் பார்க்கலாம்

இடை வனப்பும், தோள் வனப்பும், ஈடின் வனப்பும்,
நடை வனப்பும், நாணின் வனப்பும், புடை சால்
கழுத்தின் வனப்பும், வனப்பு அல்ல; எண்ணோடு
எழுத்தின் வனப்பே வனப்பு. (ஏலாதி 74)

இரண்டு பாடல்களும் ஒரேபோல் இருப்பதைப் பார்க்கையில் ஒரு புலவரை அப்படியே மற்றொருவர் பிரதி எடுத்தாற்போல இருக்கிறது. ஒருவரின் நுண்மாண் நுழைபுலமும், மற்றொருவரின் களவாடலும் தெரிகிறது. 

இன்றெனது குறள்(கள்):

நுண்ணிய நூலறிவு அற்றார்க் கழகிருந்தென்
பண்ணிய பொம்மையைப் போல்?
nuNNiya nUlaRivu aRRArk kazakirundhen
paNNiya pommaiyaip pOl?

நுண்ணிய நூலறிவு அற்றார் அழகெல்லாம்
பண்ணிய பொம்மைக்கே ஒப்பு
nuNNiya nUlaRivu aRRAr azagellAm
paNNiya pommaikkE oppu.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...