5th Jun 2013
உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களரனையர் கல்லா தவர்.
(குறள் 406: கல்வி அதிகாரம்)
Transliteration:
uLarennum
mAththiraiyar allAl payavAk
kaLaranaiyar
kallA dhavar
uLarennum – they merely exist in form
mAththiraiyar – is the extent to which uneducated are valued.
allAl – other than that
payavAk – of no use (the uneducated)
kaLaranaiyar – because they are like non-producing or barren
land
kallAdhavar – who? Uneducated!
This verse declares that uneducated are of no use to
the society. They can be compared to unyielding, unproductive barren land. They
just merely exist in body and flesh as a form, but will never be taken
seriously into consideration as a life of some value.
As an alternate verse today, apart from the verse to
convey the original thought, I have compared them to be a jackfruit without the
real fruit inside, meaning, utterly useless. Without the fruit inside, who will
value the thorny jackfruit?
“Uneducated
are nothing but an existence in form
Like a barren land, non-producing and unfit to
farm”
தமிழிலே:
உளரென்னும் - ஏதோ உடலோடு இருக்கிறார்
மாத்திரையர் - என்னும் அளவினரே
அல்லால் - அன்றி
பயவாக் - எந்தவொரு பயனுமில்லாத
களரனையர் - சேற்று நிலத்தினைப் போன்றவரே
கல்லாதவர் - கல்வி கற்காதவர்
கல்லாதாரால்
யாதொரு பயனுமில்லை என்பதற்கு, அவர்களை விளைச்சலில்லாத களர் நிலத்திற்கு (சேறும் சகதியுமாய்
உள்ள நிலத்திற்கு) ஒப்பாகக் கூறி, கல்லாதோர் உடம்புள்ள ஓருருவாகக் கொள்ளப்படுவரே அன்றி
அவர்கள் ஒரு பொருட்டேயல்ல என்கிறார் வள்ளுவர். மாற்றுக்குறளுக்கு சற்று மாறாக சுளையில்லாத பலாப்பழத்துக்கு
ஒப்பாகவும் ஒரு குறளினை எழுதியுள்ளேன். சுளையென்று ஒன்றில்லாவிட்டால் முள்நிறைந்த சக்கைப்
பலாவை யார் கவனிக்கப்போகிறார்கள்?
இன்றெனது குறள்(கள்):
சேற்றுநிலம் போல்வரே கல்லார் உடலென்னும்
தோற்றமட்டும் கொள்கின் றவர்.
sERRunilam pOlvarE kallAr udalennum
thORRamattum koLgin Ravar
உவர்நிலம் போல்கல்லார் தம்முடலாம் குட்டிச்
சுவர்மட்டும் கொள்கின் றவர்.
Uvarnilam pOlkallAr thammuDalAm
kuTTich
suvarmaTTum koLgin Ravar
(இந்த மாற்றுக்குறள், நண்பர் கந்தசாமி சேற்றுமண்ணே சோற்றுமண் என்று சுட்டிக்காட்டிய பின்னர் எழுதியது.)
(இந்த மாற்றுக்குறள், நண்பர் கந்தசாமி சேற்றுமண்ணே சோற்றுமண் என்று சுட்டிக்காட்டிய பின்னர் எழுதியது.)
விளையா பயனில் நிலமனையர் கல்லார்
சுளையில் பலாபோன் றவர்
viLaiyA payanil nilamanaiyar kallAr
suLayil palApOn Ravar
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam