4th Jun 2013
கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்.
(குறள் 405: கல்வி அதிகாரம்)
Transliteration:
kallA oruvan
thagaimai thalaippEidhu
sollADach
chOrvu paDum
kallA
oruvan - Uneducated
thagaimai - assuming
self to be well read scholar
thalaippEidhu – seeking the company of Scholars
sollADach – and conversations
chOrvu
paDum – will set self for exposing ignorance
and self-worth.
A frog would identify its place by making sound not
knowing the impedfing danger, to the snakes in search of a prey for food. Though
uneducated can be compared to frogs in the well, educated should not be
compared to snakes, but the example gives an idea behind this verse.
The verse says thus: Uneducated, when they think of
themselves as if well read and so show off to the external would invite the
trouble of bringing educated to have discussions, in the process of exposing
their ignorance and hence any respect they would have had.
This thught has been expressed in kambaraamayanam in
“maRamarap paDalam” and “pUkkoi paDalam” and other sangam and post sangam works
like nanneRi and pazhamozhi etc.
“Assumed
intellect and selfworth on unlearned
Get shameful expose in the assembly of learned”
தமிழிலே:
கல்லா ஒருவன் - கல்வியறிவில்லாத ஒருவன்
தகைமை - தான் மெத்தப்படித்த அறிவாளிபோலக் காட்டிக்கொள்ள
தலைப்பெய்து - கற்றோர்களுடன் ஒன்று கூடி
சொல்லாடச் - உரையாடிட
சோர்வு படும் - அதனாலேயே அவர் மதிப்பு குறைந்துவிடும் (நுணலும்
தன்வாயால் கெடுவதுபோல்)
தவளையானது, தான் இருப்பதை
தாமிடும் ஒலியினாலேயே இரைதேடி வரும் பாம்புகளுக்கு தம்மைக் காட்டிக்கொடுத்துவிடும்.
கல்லாதவர்களை கிணற்றுத் தவளைக்கு ஒப்பிடலாமென்றாலும், கற்றவர்களை பாம்புகளுக்கு ஒப்புகூற
முடியாது.
குறள் கூறும் கருத்து இதுதான்:
தம்மை அறிவாளிகளாக் தாமே உருவகித்துக்கொண்டு, கற்றோருடன் உரையாட முற்படும் கல்லாதவர்கள்
தங்கள் பேச்சினாலேயே ஏதேனும் மதிப்பு இருந்தாலும் அவற்றைக் குறைத்துக் கொண்டுவிடுவார்கள்.
இதே கருத்தை பழமொழிப் பாடல், “கல்லாதான்
கண்ட கழிநுட்பம் கற்றார்முன் சொல்லுங்கால் சோர்வு படுதலால்” என்கிறது. கம்பனின்
கவிநயம் இதை மராமரம் துளைத்தபடலத்தில், “ அயர்வில்
கேள்விசால் அறிஞர் வேலைமுன் பயில்வில் கல்வியார் பொலிவில் பான்மைபோல்” என்று சொல்கிறது.
இதன்பொருள், “தளர்வு இல்லாத கேள்வியால்
நிரம்
பப்பெற்ற அறிஞர்களின் கடல்போன்ற கூட்டத்திற்கு
முன் கல்விப் பயிற்சி இல்லாதவர்கள்
மேன்மையில்லாது விளங்குதல் போல” என்பதாம். பூக்கொய் படலத்திலும் ஒத்தகருத்தை முன்வைக்கிறார்
கம்பர். “வாசகம் வல்லார் முன் நின்று யாவர் வாய் திறக்க வல்லார்?” நன்னெறிப்பாடல் ஒன்று, “எழுத்தறியார் கல்விப்
பெருக்கம் அனைத்தும் எழுத்தறிவார்க்
காணின் இலையாம்'' (நன்னெறி - 21) என்கிறது.
இன்றெனது குறள்:
கற்றார்முன் கற்றார்போல் காட்டிடும் கல்லாரின்
சொற்களே சொல்லிவிடும் சோர்வு
kaRRArmun kaRRArpOl kATTiDum
kallArin
soRkaLE solliviDum sOrvu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam