ஜூன் 19, 2013

குறளின் குரல் - 428


19th June 2013
செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்?
                         (குறள் 420: கேள்வி அதிகாரம்)

Transliteration:
cheviyiR chuvaiyuNarA vAyuNarvin mAkkaL
aviyinum vAzhinum En?

cheviyiR – Through the ears
chuvaiyuNarA – not knowing the taste of gaining knowledge by listening
vAyuNarvin – but only know the taste of mouth (both useless talk and eating gluttonous)
mAkkaL – the foolish people
aviyinum – whether they perish
vAzhinum – or live
En? – what use is it?

Are there worse losers than those who do not know the appropriate use of sensory organs and put them to proper use? – a question which is asked many a times. This verse also asks the same about those that do not know the taste of knowledge heard by their ears by listening to scholars, but only know the taste of their mouth, which could be either due to greedy eating or by useless talk; what difference does it make whether they are living or dead? Of course the answer is obvious, none!

For those who know only the taste of useless speech or gluttonous eating
What difference is it if they die or live, when they know no taste of listening?

தமிழிலே:
செவியிற் - காதுகளால் கேட்டு அறியக்கூடியவற்றின்
சுவையுணரா  - அறிவுச் சுவைதன்னை உணராத
வாயுணர்வின் - ஆனால் வாயால் உணரக்கூடிய சுவைமட்டும் (வீண்பேச்சும், உணவுச் சுவை)
மாக்கள் - அறிந்த மூடர்கள் (வீணர்களையும், மூடர்களையும் மாக்கள் எனல் பொருத்தமே)
அவியினும் - அழிந்தாலும்
வாழினும் - வாழ்ந்தாலும்
என்? - அதனால் என்ன பயன் இருக்கப்போகிறது?

புலன்களின் பயனை சரிவர அறியாமலும், பயனாக்காமலும் உள்ளவர்களைவிட வீணர்கள் யாரேனும் உண்டா? என்ற கேள்வி அடிக்கடி கேட்கப்படுகிற ஒன்று. இக்குறளில் கேட்கப்படுவது அதுதான். செவியால் கேட்டு அறியப்படக்கூடிய சொற்சுவையும், பொருட்சுவையுமான அறிவுக் கருவூலங்களினை அறியாது, வாயால் உணரக்கூடிய உணவுச் சுவையை (அளவுக்கதிகமாக), அல்லது வீணாகப்பேசி அதில் இன்பம் காணுகிற சுவையை அறிந்தவர்கள் வாழ்ந்தாலும், இறந்து மடிந்தாலும் அதனால் உலகததிற்கு ஆவது என்ன? கேள்வியல்ல இது, கேலி! ஒன்றுமில்லை என்கிற பதிலைத்தவிர ஒன்றுமில்லை என்றறிந்தும், கேட்கப்படுவது!

இன்றெனது குறள்:

கேள்விச் சுவையறியார் நாச்சுவை நன்கறிந்தார்
மாள்வதேமேல் வாழ்வது வீண்

kELvich chuvaiyaRiyAr nAchchuvai nangaRindhAr
mALvadhEmEl vAzhvadhu vIN

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...