ஜூன் 20, 2013

குறளின் குரல் - 429


43:  (Possession of Wisdom - அறிவுடமை)
[After the chapters on learning, not learning, learning by listening, this chapter is about possession of wisdom. Here vaLLuvar explores what it means to possess wisdom and who people of wisdom are and what kind of protection it is etc.]

20th June 2013

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்.
                                  (குறள் 421: அறிவுடமை அதிகாரம்)

Transliteration:
aRivaRRang kAkkum karuvi seRuvArkkum
uLLazhikka lAgA aRaN

aRiv(u) – wisdom is
aRRam kAkkum – save from destruction
karuvi – an implement or device
seRuvArkkum – even for the enemies
uLL – of inner resolve
azhikkalAgA – unshakeable or indistructible
aRaN – (wisdom is a ) fortress

The first verse of this chapter gives a strong reason for possessing wisdom! Wisdom saves a person from destruction. The destruction mentioned is not the ultimate demise of the body, but the ensuing one that will follow in births to come, when a person has not equipped self with wisdom by learning. Since the soul transcends birth, wisdom will save a person from destruction in all births. Also, it is like an impenetrable fortress to the enenmies that the desires of five senses.

Wisdom prevents destruction of self; and acts as a fortress
 to inner strength that saves from the distruction and distress.”

தமிழிலே:
அறிவு - ஒருவரின் அறிவுடமை
அற்றங் காக்குங் - அவரை அழிவிலிருந்து காக்கின்ற
கருவி - ஒரு கருவியாகும்
செறுவார்க்கும்
 - உள்ளத்துறுதியைக் குலைக்கும் பகைவர்களான ஐம்புலனாசைகள்
உள்ளழிக்கலாகா - உள்ளத்தை அழிக்க முடியாதபடி காக்கின்ற
அரண் - கோட்டையும் கூட (அறிவுடமைதான்)

இவ்வதிகாரத்தின் முதற்குறளிலேயே அறிவுடமை ஏன் கொள்ளவேண்டுமென்பதற்கான காரணத்தை வலிவுடன் சொல்லித் தொடங்குகிறார் வள்ளுவர். அறிவு ஒருவருக்கு, அவருக்கு அழிவு வராமல் காக்கின்ற கருவி. அழிவு என்பது உடலுக்கான மரணம் என்பதல்ல. ஒருவரின் ஆத்துமா பிறவிகளைக் கடப்பது. அறிவுடமை, எப்பிறப்பிலும் கூட வருவது; தீச்செயல்களிலிருந்து ஒருவரைத் தவிர்த்து இப்பிறப்பிலும், வரும் பிறவிகளிலும் துன்பங்களாகிய அழிவிலிருந்து காப்பதுதான் அறிவுடமை. தவிரவும் உள்ளத்து உறுதியைக் குலைக்கும் ஐம்புலனவாக்களும் உள்ளத்தை வெல்லமுடியாதபடியான உறுதியான கோட்டையுமாகும்.

இன்றெனது குறள்:

அழிவிலாமல் காக்கும் அறிவு பகையும்
அழிக்கொணா காக்கும்கோட் டை

azhivilAmal kAkkum aRivu pagaiyum
azhikkoNA kAkkumkOT Tai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...