21st June 2013
சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு.
(குறள் 422: அறிவுடமை அதிகாரம்)
Transliteration:
senRa iDaththAl – Whereever the mind goes, ie., wanders
selaviDA – not allowing,
thIthu orIi – keeping the evil away
nanRinpAl – towards good ways
uyppadh(u) – to reach us is
aRivu – wisdom
One must not let his/her mind wander, keep evil ways and deeds away, and
must stay in good deeds; that is known as wisdom – Says vaLLuvar. In
Thirumanthiram, ThirumUlar says, one must not control the five sense or their respective
organs because, such a stern practice would render a person as inanimate or
dead object. What would be ideal is to use the same approrpriately and keep
them operating in good ways. The verse says, only fools would demand that all
five senses must be shut. Even there is none in heavens that have controlled
five senses. Since I realized such an effort befits the dead, I have realized
not to control my five senses.
Not letting the mind
wander, and keeping the evils away
Wisdom sets a persons’s
mind in good ways without sway
தமிழிலே:
சென்ற இடத்தால்
- மனம் எங்கெல்லாம் சென்று அலைகிறதோ
செலவிடா - அங்கெல்லாம்
செல்லவிடாது
தீது ஒரீஇ
- தீதெல்லாம் தவிர்த்து
நன்றின்பால் -
நல்ல வழிகளில்
உய்ப்பது - கொண்டு
சேர்ப்பதே
அறிவு - ஒருவருடைய
அறிவுதான்
ஒருவர் தம் மனதை அது செல்லுமிடமெல்லாம் சென்று அலையவிடாமல்,
தீயவழிகளைத் தள்ளிவிட்டு, நல்லவழிகளில் கொண்டு சேர்ப்பதே அறிவுடமையாகும்.
திருமந்திரத்தில் திருமூலர் ஐம்புலன்களை அடக்கவேண்டாம்
என்கிறார். ஏனெனில், அடக்கினால், உயிரற்ற சடப்பொருள் அல்லது சடலப்பொருள் ஆகிவிடுவோம்.
அடக்குவதற்கு பதிலாக, புலன்களை தகுந்த வழியில் பயனுறுத்த வேண்டும். இதைத்தான் வள்ளுவரும்
கூறுகிறார். திருமந்திரப்பாடல் இதுதான்.
அஞ்சும் அடக்குஅடக்கு
என்பர் அறிவிலார்
அஞ்சும் அடக்கும்
அமரரும் அங்கிலை
அஞ்சும் அடக்கிய
அசேதன மாம்என்றிட்டு
அஞ்சும் அடக்கா
அறிவு அறிந்தேனே.
அறிவில்லாதவர்களே
புலனடக்கம் வேண்டுமென்பார். அறிவுள்ளவர்கள் புலனொழுக்கம் வேண்டுமென்பார்கள். புலன்களை
அடக்கிய வானோர்கள் கூட இல்லை. ஐம்புலன்களையும் அடக்கிவிட்டால், சடப்பொருளாகிவிடுவோம்
அதனால் அவற்றை அடக்காமல், இயல்பான செயல்களைச் செய்யும், அறிவே ஒருவர் பெறவேண்டும் இதைத்தான்
வள்ளுவரும் சொல்லுகிறார்.
இன்றெனது குறள்:
அலைவையில் ஆழ்த்துமறம் அல்ல அகற்றி
நிலையில் நிறுத்து மறிவு
alaivaiyil AzththumaRam alla agaRRi
nilaiyil niRuththu maRivu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam