ஜூன் 23, 2013

குறளின் குரல் - 431


23rd June 2013

எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு.
                                  (குறள் 424: அறிவுடமை அதிகாரம்)

Transliteration:
eNporuLa vAgach chelachchollith thAnpiRaivAi
nUNporuL kaNba dhaRivu

eNporuLavAgach – easy and lucid speech
chelachchollith – for others to understand easily
thAnpiRaivAi – listening to other speak
nUNporuL – subtle and highly valuable
kaNbadh(u) aRivu – understanding easily is known as wisdom

This verse registers a simple thought that too along the lines of thought expressed in this verse. When someone speaks, it should be easy and lucid for others to comprehend and register in thir minds forever. Similar, when listening to others one must have sharp hearing to undertand quickly what is being said. These are the traits of a having wisdom.

The abilities of putting a thought across with the power of tongue for people to comprehend easily, and to to comprehend when others speak, are the gifts of wisdom.  Some scholars can convey even the most difficult concepts very easily and make the listeners comprehend. This requires not only ability to speak nicely, but with authority of knowledge. Similary to comprehend what others say, despite inadequate communication is again the abiiity of rarity. Wisdom is the blend of both these abilities.

“Speaking lucidly, for others to understand easily and keep it etched forever
 And listening to understand subtle nuances of others’re wisdom’s nifty lever”

தமிழிலே:
எண்பொருளவாகச் - சொல்லும் கருத்தை எளிய விதமாக
செலச்சொல்லித் - பிறருக்கு மனதில் பதியும்படி விளங்கச் சொல்லி
தான்பிறர்வாய் - தான் பிறரிடம் கேட்பவற்றை
நுண்பொருள் - நுட்பமாக கேட்டறிந்து
காண்பது அறிவு - விளங்கிக்கொள்ளுதல் அறிவுடமையாகும்

இக்குறள் சொல்லும் கருத்து எளிமையானது, இக்குறள் ஒரு கருத்தைச் சொல்வதை எப்படிச் சொல்லவேண்டுமென்று சொல்கிறதோ, அதற்கே எடுத்துக்காட்டாய் இருக்கிறது இக்குறள், சொல்லும் கருத்தை பிறருக்கு மனதில் பதியும் படி, விளங்கச் சொல்லவேண்டும். அதே போல், பிறர் சொல்லும் கருத்துகளையும் நுட்பமாகக் கேட்டறிந்து விளங்கிகொள்ளவேண்டும். இவையே அறிவுடமைக்கு அடையாளங்கள்.

சொல்வன்மை, கேள்வி இரண்டையும் ஒருங்கே அமையப்பெறுதலே அறிவுடமையாம். சிலர் மிகவும் கடினமான கருத்துக்களையும், கோட்பாடுகளையும் கூட மிகவும் எளிதாக அடுத்தவர் மனங்களில் பதிய, அறிய சொல்லும் திறமை வாய்ந்தவர்கள். இதற்கு மிகவும் ஐயம் அகன்ற ஆழ்ந்த நூலறிவும், அனுபவ அறிவும் தேவை.  அறிவில் மிக்கவர்கள் பேசும் பேச்சினைக் கேட்டு உள்வாங்கி விளங்கிக் கொள்ளுதலும் அதேபோன்று மிகவும் சிறந்தவொன்றுதான். மிக்க கவனமும், கேட்டத்தை ஆராய்ந்து புரிந்துகொள்ளும் திறமையும் அறிவுடையவர்களுக்கே இருக்கும்., இதனாலே இவ்விரண்டையும் சேர்த்துப் பெறுதலை அறிவுடமையென்கிறார் வள்ளுவர்.

இன்றெனது குறள்:

அருங்கருத்தை தெள்ளிதின் சொல்லி பிறர்சொல்
அருங்கருத்தும் தெள்ளல் அறிவு

(தெள்ளிதின் - தெளிவாக, தெள்ளல் - தெளிவாகுதல்)

arungkaruththai theLLalAich cholli piRarsol
arungkaruththum kANba dhaRivu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...