மே 04, 2014

குறளின் குரல் - 745

4th May 2014

நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு.
                        (குறள் 739: நாடு அதிகாரம்)

நாடென்ப - ஒரு நல்ல நாடு என்பது
நாடா - வளத்தை நாடி வருந்தாமலே
வளத்தன - எல்லா வளத்தையும் தன்னகத்தே கொண்டதாம்
நாடல்ல - ஒரு நாடு நல்ல நாடென்றறியப்படாது
நாட - அந்நாடு வளமுறுதற்காக வருந்தி உழைத்துக்கொண்டே இருந்தால் மட்டுமே
வளந்தரு - அவ்வளத்தை தருகின்ற
நாடு - நாடாக இருப்பின்

சொல் நயத்துக்காகவும், ஓசை நயத்துக்காகவும் மேற்கோளாக இடப்படும் குறளிது. மற்றபடி எளிய கருத்தைச் சொல்லுகின்ற ஒன்று. எவ்வளத்தையும் நாடிச் செல்லாமல், வருந்தாமல், ஒரு நாடு இயற்கையாக எல்லா வளங்களையும் பெற்றிருக்குமாயின், அது நல்ல நாடாகும். அவ்வாறன்றி வாடித், தேடினால் மட்டுமே எல்லா வளங்களையும் அது  தருமாயின் அது வளமான நாடென்று சொல்லப்படமாட்டாது. சுருங்கச் சொல்லின் குடிமக்கள நாடத்தக்கதாக, வளங்கள் பெற்றிருந்தாலே நாடு எனப்படும்.

Transliteration:

nADenba nADA vaLaththana nADalla
nADa vaLantharu nADu

nADenba – A good nation is known to so
nADA – if it gives without havi`ng to struggle or even looking for
vaLaththana – the prosperous state.
nADalla – Other nations are not considered so
nADa – if people have to struggle and seek (prosperity)
vaLantharu – gives prosperity
nADu – the nation.

Another verse that is often quoted for its poetical construction as well as the lilt in its meter. Otherwise the content of this verse is rather simple and nothing extraordinary. A nation is worth being called so if has the natural prosperity without it citizens having to seek and ask. A nation is not worth being called so, if its citizens have to seek and search for prosperity with hard work, always and afflicted by calamities of all kinds always.

“A nation is one that has all the wealth without having to seek;
 Not so, if for everything, it seeks always with the chances bleak”

இன்றெனது குறள்:

வாடி வருந்தா வளத்ததே நாடல்ல
வாடின் வளங்கொடுக்கும் நாடு

vADi varundhA vALaththadhE nADalla

vADin vaLangkoDukkum nADu

மே 03, 2014

குறளின் குரல் - 744

3rd May 2014

பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து.
                        (குறள் 738: நாடு அதிகாரம்)

பிணியின்மை - நோயின்மை
செல்வம் - ஆக்கம், பொருளுடைமை
விளைவு - செழிப்பான விவசாயமும், விளைச்சலும்
ன்பம் - மகிழ்ச்சி
ஏமம் - பாதுகாப்பான காவல்
அணியென்ப - அணிகலம் போன்றன
நாட்டிவ் வைந்து - ஒரு நாட்டுக்கு இந்த ஐந்தும்

நோயற்ற மக்களும், ஆக்கமாகியச் செல்வச் செழிப்பும், மக்களின் உணவுத் தேவைகளை நிறைவுசெய்யும் மிகுந்த விளைச்சலும், மக்கள் பொதுவாக மகிழ்ச்சியுடன் இருப்பதும், பாதுகாப்பாக உணர்வதும் ஆகிய இவ்வைந்துமே ஒரு நாட்டுக்கு அணி அல்லது அழகு செய்வதாகக் நூல் வல்லோர்கள் கருதுவர் என்கிறது இவ்வெளிய குறள்.

Transliteration:

piNiyinmal selvam viLaivinbam Emam
aNiyenba nATTiv vaindhu

piNiyinmal – disease free
selvam - wealthy
viLaiv(u) – more than required produce production
inbam - happiness
Emam - safety
aNiyenba –the ornaments tha give beauty to the
nATTiv vaindhu – country are these five.

The fiver attributes of a country that define its beautiy and decorate state are: being disease free, overall wealthy, excellent and high yielding in agricultural of production, able to keep citizens happy state always and providing protection and safety to the nation on the whole – so opine the authors and authority of what a nation is.

“Disease free, wealthy, high agricultural production, happiness and protection
 are the five attributes that decorate a nation, say the scholars of high traction

இன்றெனது குறள்:


நோயற்றல் ஆக்கம் பயிர்செழிப்பு இன்புகாப்பு
ஆயவைந்தும் நாட்டுக் கணி

nOyaRRal Akkam payirsezhippu inbukAppu
Ayavaindhu nATukk kaNi

மே 02, 2014

குறளின் குரல் - 743

2nd May 2014

இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற் குறுப்பு.
                          (குறள் 737: நாடு அதிகாரம்)

இருபுனலும் -  ஊற்றாய் இருக்கும் நிலத்தடி நீரும், மலையில் தோன்றி ஆறாகப் பெருக்கெடுக்கும் நீரும்
வாய்ந்த மலையும் - ஓங்கி நின்று அரணாயும், பல வளங்களுக்கு இருப்பிடமாகவும் இருக்கும் மலைகளும்
வருபுனலும் - வானின்று பெய்து வளமாக்கும் மழையும்
வல்லரணும் - நாட்டைக் காப்பாற்றக்கூடியக் கோட்டை போன்ற வலிமையான அரணும்
நாட்டிற்கு உறுப்பு - ஒரு நாட்டிற்கு வேண்டிய முக்கிய அவையங்களாகும்

ஒரு நாட்டினுடைய முக்கிய அவையங்களாவன: இரு நீர் ஆதாரங்களான நிலத்தடி ஊற்று நீரும், மலைகளில் தோன்றி ஆறுகளாய் பெருக்கெடுக்கும் ஆற்று நீரும், ஓங்கி வளர்ந்து அரணாகவும் மற்றும் பல இயற்கை வளங்களைக் கொண்டதாகவும், வான்மழை கொண்டு, சுனைகளையும், ஆறுகளுக்கான நீரையும் சேகரித்து மற்ற நீர்வளங்களுக்கு அளிப்பதாகவும் உள்ள மலைவளங்கள், நாட்டை வெளிப்பகைகளிலிருந்து காப்பாற்றக்கூடிய மதிலைக் கொண்ட கோட்டைகளே அவ்வையங்கள்.

இக்குறளில் சொல்லப்படும் இரு புனல்களை நிலத்தடி நீர், என்றும் நிலத்துக்குமேல் இருக்கும் ஆறு, குளம், ஏரி, கடல் போன்ற நீராதாரங்களாகள் என்றும் கொள்ளவேண்டும். அதே போன்று வருபுனல் என்பதை மலையில் பிறந்து ஒழுகும் சுனைகளுக்குக் கொள்ளலாம் என்றாலும் அவற்றுக்கும் ஆதாரம் வான் பெய்து தரும் மழைவளம்தான். மற்றொரு விதமாக பொருள் கொள்வதும் பொருத்தமாக இருக்கலாம். இருபுனல் என்பது நாட்டில் ஏற்கனவே உள்ள நீர் வளங்கள் என்றும், வருபுனல் என்பதை,  பிறநாட்டில் பிறந்து நாட்டின் ஊடே செல்லும் நீர் வளங்களான ஆறுகளையும் குறிக்கலாம்.

Transliteration:
irupunalum vAindha malaiyum varupunalum
vallaraNum nATTiR kuRuppu

iru punalum - The dual water resources of underground water,  and above ground water resources of rivers, lakes, and seas
vAindha malaiyum - the high mountains that deter enemies, and also a home to a lot of natural resources useful to a country
varu punalum- the rains that pour without fail for the prosperity of the nation
vallaraNum - strong fortress that protect the state from external enemies
nATTiR kuRuppu - are the limbs, important parts of a nation.

A nation’s important limbs are the following: The dual water resources of underground water and above water ground resources such a rivers, lakes and oceans; the high mountains that  serve as a natural deterrent to outside enemies, and also home to a lot of natural resources a nation needs; the rains that without fail pour for the prosperity of the nation.

The dual water resources mentioned in this verse as “iru punal” are underground water streams and above ground water resources such as rivers, lakes and seas only, not rains as mentioned in some commentaries. Also another interpretation for “irupunal”, could mean incumbent water resources and “varupunal” could mean seasonal rains and the rivers that pass through the nation.

“The incumbent under and above ground water resources of a nation, mountains tall
 with natural resources, a strong fortress, are the limbs of a nations saving from fall”

இன்றெனது குறள்:

ஊற்றொடு ஆற்றுநீர் ஓங்குமலை வான்மழைகாப்
பாற்றுமரண் நாட்டினங்கங் கள்


URRoDu ARRunIr Ongumalai vAnmazhakAp
pARRumaraN nATTinagang gaL

மே 01, 2014

குறளின் குரல் - 742

1st May 2014

கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா
நாடென்ப நாட்டின் தலை.
                              (குறள் 736: நாடு அதிகாரம்)

கேடறியாக் - பகையாலும், மற்று இயற்கை அளிக்கும் கேடுகளாகிய ஏதங்கள் இல்லாமலும்
கெட்ட இடத்தும் - தவிர்க்கமுடியாமல் அவ்வாறு ஏதம் வருமாயின்
வளங்குன்றா - அதனுடைய வளப்பம் சற்றும் குறையாத
நாடென்ப - நாட்டையே
நாட்டின் தலை - மற்ற நாடுகளை ஒப்ப சிறந்த நாடாகக் கொள்ளப்படும்.

பகைவர்கள், மற்றும் இயற்கை அழிவுகள் போன்ற, எவ்வித கேடுகளும் இல்லாததும், அப்படியே அவை நேருமாயின், அவற்றாலும் நாட்டினுடைய பெருக்கமும், வளப்பமும் குன்றாத நாடே, எல்லா நாடுகளிலும் சிறந்த நாடாகக் கொள்ளப்படும். எளிய குறளால், தலை சிறந்த நாடு எது என்பதைச் சொல்லுகிற குறள். கேடறியா நாடுகள் உள்ளனவா என்பது கேள்விக்குறியே.

ஆயினும், பகைவர்களாலும், இயற்கை அழிவுகளாலும், உள்ளூர் அரசியல் சுரண்டுதல்களாலும் எவ்வளவு கேடுகள் வந்தாலும் சில நாடுகள் தங்கள் இயற்கையாக உள்ள வளங்களையும் வனப்பினையும் இழப்பதில்லை. ஆயினும் குந்தித் தின்றால் குன்றும் கரையும் என்பது போல், முடிவில் அந்த வளப்பமும், வனப்பும் கூட காணாமல் போகலாம் என்று யோசிக்க வைக்கின்ற குறள்.

Transliteration:

kEDaRiyAk keTTa iDaththum vaLankunRA
nADenba nATTin thalai

kEDaRiyAk - devoid of any calamitous happenings due to natural disasters or external enemies
keTTa iDaththum - even when such disastrous are there
vaLankunRA - not depleted in its prosperity
nADenba - such a nation
nATTin thalai - is the best among others.

A state which is devoid of any natural or man made disasters and even at the face of such disasters does not deplete in its is wealth and prosperity is the best among all the states - a verse that defines what makes a state the best among others. The question is if such a state exists today.

It is also true despite many such natural calamities, national disasters due to famine, enemies, internal looters in politicians, internal and external corporate looters, certain states thrive and do well for a long period. However prolonged looting will certainly diminish the prosperity as the resources will be steadily depleted and stolen. The verse makes us think about such possibilities.

A nation devoid of internal and external disasters and despite
them still being prosperous is recognized among all, the best”

இன்றெனது குறள்:

ஏதமின்றி, உற்றும் பெருக்கம் அழிக்கின்ற
தீதகன்ற நாடுயர்ந்த நாடு

EdhaminRi, uRRum perukkam azhikkinRa

thIdaganRa nADuyarndha nADu

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...