4th May 2014
நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு.
(குறள் 739: நாடு அதிகாரம்)
நாடென்ப - ஒரு நல்ல நாடு என்பது
நாடா - வளத்தை நாடி வருந்தாமலே
வளத்தன - எல்லா வளத்தையும் தன்னகத்தே
கொண்டதாம்
நாடல்ல - ஒரு நாடு நல்ல நாடென்றறியப்படாது
நாட - அந்நாடு
வளமுறுதற்காக வருந்தி உழைத்துக்கொண்டே இருந்தால்
மட்டுமே
வளந்தரு - அவ்வளத்தை
தருகின்ற
நாடு - நாடாக
இருப்பின்
சொல் நயத்துக்காகவும், ஓசை நயத்துக்காகவும்
மேற்கோளாக இடப்படும் குறளிது. மற்றபடி எளிய கருத்தைச் சொல்லுகின்ற ஒன்று. எவ்வளத்தையும்
நாடிச் செல்லாமல், வருந்தாமல், ஒரு நாடு இயற்கையாக எல்லா வளங்களையும் பெற்றிருக்குமாயின், அது நல்ல நாடாகும். அவ்வாறன்றி வாடித், தேடினால் மட்டுமே எல்லா வளங்களையும்
அது தருமாயின் அது வளமான நாடென்று சொல்லப்படமாட்டாது.
சுருங்கச் சொல்லின் குடிமக்கள நாடத்தக்கதாக, வளங்கள் பெற்றிருந்தாலே நாடு எனப்படும்.
Transliteration:
nADenba nADA vaLaththana
nADalla
nADa vaLantharu nADu
nADenba – A
good nation is known to so
nADA – if
it gives without havi`ng to struggle or even looking for
vaLaththana – the
prosperous state.
nADalla –
Other nations are not considered so
nADa – if
people have to struggle and seek (prosperity)
vaLantharu –
gives prosperity
nADu – the
nation.
Another verse that
is often quoted for its poetical construction as well as the lilt in its meter.
Otherwise the content of this verse is rather simple and nothing extraordinary.
A nation is worth being called so if has the natural prosperity without it
citizens having to seek and ask. A nation is not worth being called so, if its citizens
have to seek and search for prosperity with hard work, always and afflicted by
calamities of all kinds always.
“A nation is one that has all the wealth without
having to seek;
Not so,
if for everything, it seeks always with the chances bleak”
இன்றெனது குறள்:
வாடி வருந்தா வளத்ததே நாடல்ல
வாடின் வளங்கொடுக்கும் நாடு
vADi varundhA vALaththadhE nADalla
vADin vaLangkoDukkum nADu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam