सति जगदम्बिके हरकुटुम्बिनि वक्त्ररुचा
जित शरदम्बुजे घन
विडम्बिनि केशरुचा ।
पर मवलम्बनं भव समाद्रुत काञ्चिपुरे
मम गतसंविदो जडिमडम्बरताण्डविनः ॥ ९८॥
ஸதி2 ஜக³த³ம்பி³கே ஹர குடும்பி³னி வக்த்ரருசா
ஜித ஶரத³ம்பு³ஜே க⁴ன விட³ம்பி³னி கேஶருசா ।
பரமவலம்ப³னம் ப⁴வ ஸமாத்³ருத காஞ்சிபுரே
மம க³த ஸம்விதோ³ ஜடி³மட³ம்ப³ர தாண்ட³வின: ॥ 98॥
ஸதி தேவியே! உலகன்னையும்,
அரனின் மனைவியும், முகவொளியில் கூதல் பருவத்
தாமரையை வென்றவளும், கேசவொளியால் மேகம்போல் தோன்றுபவளும், காஞ்சிபுரி இருப்பை ஆதரிப்பவளும்,
அறியாமைப் பகட்டால் கூத்தாடி உணர்விழந்தனுமான எனக்குச் சிறந்த ஆதாரமாக இருப்பாயே!
சதியே! உலகத்தின் தாயே! அரர்க்குத் தலைமகளே!
கதிர்முகத் தால்கார் கமலம் செயித்தாளே!
கார்முகிலாய்
வதிவோளே, கேச வயக்கில்! புரிக்காஞ்சி
வாழ்விழைவே!
மதியீனக் கூத்தில் மயர்வுற்றேன் என்னுடை
வாழ்நிலையே!
தலைமகள்-மனைவி;
வதி-இருப்பு; வயக்கு-காந்தி; மயர்வு-அறிவிழத்தல்; வாழ்நிலை-ஆதரவு
பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):
சதியே! உலகத்தின்
தாயே! அரர்க்குத் தலைமகளே! கதிர்முகத் தால்கார் கமலம் செயித்தாளே! கார்முகிலாய் வதிவோளே
கேச வயக்கில்! புரிக்காஞ்சி வாழ்விழைவே! மதியீனக் கூத்தில் மயர்வுற்றேன் என்னுடை வாழ்நிலையே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam