ஜூலை 18, 2017

மூகபஞ்சசதீ - ஸ்துதி சதகம் -99

भुवनजननि भूषाभूतचन्द्रे नमस्ते
कलुषशमनि कम्पातीरगेहे नमस्ते
निखिलनिगमवेद्ये नित्यरूपे नमस्ते
परशिवमयि पाशच्छेदहस्ते नमस्ते ९९॥

புவனஜனனி பூஷாபூதசந்த்³ரே நமஸ்தே
கலுஷஶமனி கம்பாதீரகே³ஹே நமஸ்தே
நிகி²லனிக³மவேத்³யே நித்யரூபே நமஸ்தே
பரஶிவமயி பாஶச்சே²³ஹஸ்தே நமஸ்தே 99

உலகின் தாயே! சந்திரனை அணிந்தவளே! வணக்கம்! பாபத்தை நீக்குபவளே! கம்பைக் கரையில் வசிப்பவளே! வணக்கம்! எல்லா வேதங்களாலும் உணரத்தக்கவளே! நித்திய உரு கொண்டவளே! வணக்கம்! பரமசிவ வடிவினளே! பாசங்களை வெட்டும் கையளே! வணக்கம்!

வணக்குவேன் ஞாலத்தின் மாதா! மதியால் வனைந்தவுன்னை!
வணங்குவேன் பாவங்கள் மாட்டிகம் பைக்கரை வாழுமுன்னை!
வணங்குவேன் எல்லா மறையுணர் நித்திய மாமையுன்னை!
வணங்குவேன் ஈசன் வடிவே! தொடக்க மறுப்பவளே!

வனைந்த-அலங்கரித்த; மாட்டி-போக்கி; மாமை-உருவம்; தொடக்கம்-பாசம்/பந்தம்;

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):


வணக்குவேன் ஞாலத்தின் மாதா! மதியால் வனைந்தவுன்னை! வணங்குவேன் பாவங்கள் மாட்டி, கம்பைக்கரை வாழுமுன்னை! வணங்குவேன் எல்லா மறை உணர் நித்திய மாமை உன்னை! வணங்குவேன் ஈசன் வடிவே! தொடக்கம் அறுப்பவளே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...