चराचरजगन्मयीं सकलहृन्मयीं चिन्मयीं
गुणत्रयमयीं जगत्त्रयमयीं त्रिधामामयीम् ।
परापरमयीं सदा दशदिशां निशाहर्मयीं
परां सततसन्मयीं मनसि कामकोटीं शीलये ॥ ९७॥
சராசரஜக³ன்மயீம் ஸகலஹ்ருʼன்மயீம் சின்மயீம்
கு³ணத்ரயமயீம் ஜக³த்த்ரயமயீம் த்ரிதா⁴மாமயீம் ।
பராபரமயீம் ஸதா³ த³ஶதி³ஶாம் நிஶாஹர்மயீம்
பராம் ஸததஸன்மயீம் மனஸி காமகோடீம் ஶீலயே ॥ 97॥
அசையும், அசையா
உலகமும், அனைத்துயிர்களின் இதயமும், சித்துருவும்,
முக்குணங்களும், மூவுலகும், மூவொளிகளும் (தேஜஸ்), பராபரமும், பத்து திசைகளிலும் பகலிரவானவளும்,
நல்லுருவுமாம் காமகோடியை மனதில் வணங்குகிறேன்.
உலகில் சராசரம், ஊழ்த்த உயிர்க்கெலாம்
உள்ளிதயம்,
உலகும், குணமும் ஒளியின்மும் மூன்று,
உயரறிவு,
இலகு பராபரம், ஈரைந்து திக்கும் இரவொடுப
கலதாம்மெய் ஞானமாம், காமகோ டிக்குள்ளம்
கைதொழுமே!
ஊழ்த்த-மலர்ந்த;
சித்-உயர்பொருள் அறிவு; இலகு-விளங்கு; மெய்ஞானம்-
இருப்பறிவு;
பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):
உலகில் சராசரம்,
ஊழ்த்த உயிர்க்கெலாம் உள்ளிதயம், உலகு, குணமும் ஒளியின் மும் மூன்று, உயரறிவு, இலகு
பராபரம், ஈரைந்து திக்கும் இரவொடு பகலதாம் மெய் ஞானமாம், காமகோடிக்கு உள்ளம் கைதொழுமே!
*இந்த ஸ்லோகத்தில்
இரண்டாவது வரியில், மூவுலகம், முக்குணம், முத்தீ என்று ஆசாரியர் கூறியது: பூலோகம்,
புவர்லோகம், சுவர்லோகம் -மூவுலகங்கள்; சத்வம், ரஜஸ், தமஸ் - முக்குணங்கள்; சூரியன்,
சந்திரன், அக்னி - மூன்று ஒளிகள் (தேஜஸ்);
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam