இல்லை! ஏதும் வில்லங்கமான விஷயமில்லை..
மைலையில் எங்கள் பக்கத்து வீட்டு மாமரம் காய்த்துத் தொங்குகிறது. புல்லுக்கும் ஆங்கே பொசிவது போல, எங்கள் வீட்டு மொட்டை மாடிக்குப் போனால், பறவைகள் கொத்தி கீழே போட்டது போக, சில சமயங்களில் வேகமாக அடிக்கும் காற்றினால் (அதுவும் இந்த கத்திரி வெயில் காலத்தில்), தானாக விழுகின்ற மாங்காய்கள், சில சமயங்களிலே பிஞ்சிலே பழுத்த கனிகள் என்று "தளர் ஊறுகாய்க்கு" தக்கவாறு தாராளமாகக் கிடைப்பதை என்ன சொல்வது...! திருடாமல், தானாக கிடைப்பவை அவை!
யாரோ இரவில் வந்து திருடிப்போகிறார்கள் என்று அங்கலாய்க்கக் கூட முடியாத அடுத்த வீட்டு சொத்து அவை. இருந்தாலும், நாங்கள் எங்கள் வீட்டு மொட்டை மாடிக்குச் செல்லும் வழியைப் பூட்டியே வைக்கிறோம்... எங்கேனும் எங்கள் குடித்தனக்காரர்களில் யாராவது இந்த மாங்காய்/கனிகளை எங்களுக்குத் தெரியாமல், இல்லாமல் ஆட்டையைப் போட்டுவிடுவார்களோ என்ற எண்ணத்தில், அச்சத்தில்.. அத்தனை சுயநலம் !
இலேசாக புளிப்பு, ஆனால் பெரும்பாலும், கூசுகிற பற்களுக்கும் குந்தகம் இல்லாமல்! சூம்பிப்போய் கொட்டை மட்டும் பெரிதாய், சதை சிறிதாய் இல்லாமல் நல்ல பருமனானா மாங்காய்கள் இவை.. மல்கோவா மாம்பழம் போல் பெரிதாக ஒரு வகை, நீலம் போன்று கிளிமூக்கு இன்னொரு வகை. இரண்டுமே நல்ல சுவையான இரகங்களே.
இந்த மல்கோவா வகையில் மட்டும் சற்று நார் சேர்ந்து, அவற்றைக் மென்று சாப்பிட லாயக்கில்லை.. இந்த சக்கை சனியன்கள் பல்லிடுக்கில் மாட்டிக்கொண்டு, எடுக்கப்படும் பாடு சொல்லி மாளாது. அப்படியே பழரசமாக ஆக்கி வேண்டுமானால், குடிக்கலாம்!
கிளிமூக்கு இரகத்தில்தான், தளர் மாங்காய், கசுமாங்காய் (உப்புப் போட்டு உலர்ந்த மாங்காய்), தொக்கு, ஆவக்காய் போன்ற ஊறுகாய்களைப் போட்டுக்கொள்ளலாம்.
என்னத்தான், எங்கள் வீட்டுப் பக்கதில் இருக்கும் கிளைகளில் உள்ள பழங்களையே பறிக்கிறோம் என்றாலும், அல்லது தரையில் விழுந்ததை எடுத்துக்கொள்ளுகிறோம் என்றாலும், புத்தியில் உரைக்கும் குற்ற உணர்வு, நாக்கில் சுவை இறங்கி, தொண்டையில் ஊறுகாயோ, பழமோ, சாறோ இறங்கிவிட்டால், அக்கணமே மறைந்து விடுகிறது.. !
என்ன செய்ய...? மாற்றான் தோட்டத்து மாம்பழமாயினும், மணக்குதே... சுவைக்குதே.. ருசிக்குதே...!
பின்குறிப்பு:
இது ஒரு எச்சரிக்கையும் கூட..! இதை மற்ற விஷயங்களுக்குப் பொருத்திப் பார்க்காதீர்கள்..
மைலையில் எங்கள் பக்கத்து வீட்டு மாமரம் காய்த்துத் தொங்குகிறது. புல்லுக்கும் ஆங்கே பொசிவது போல, எங்கள் வீட்டு மொட்டை மாடிக்குப் போனால், பறவைகள் கொத்தி கீழே போட்டது போக, சில சமயங்களில் வேகமாக அடிக்கும் காற்றினால் (அதுவும் இந்த கத்திரி வெயில் காலத்தில்), தானாக விழுகின்ற மாங்காய்கள், சில சமயங்களிலே பிஞ்சிலே பழுத்த கனிகள் என்று "தளர் ஊறுகாய்க்கு" தக்கவாறு தாராளமாகக் கிடைப்பதை என்ன சொல்வது...! திருடாமல், தானாக கிடைப்பவை அவை!
யாரோ இரவில் வந்து திருடிப்போகிறார்கள் என்று அங்கலாய்க்கக் கூட முடியாத அடுத்த வீட்டு சொத்து அவை. இருந்தாலும், நாங்கள் எங்கள் வீட்டு மொட்டை மாடிக்குச் செல்லும் வழியைப் பூட்டியே வைக்கிறோம்... எங்கேனும் எங்கள் குடித்தனக்காரர்களில் யாராவது இந்த மாங்காய்/கனிகளை எங்களுக்குத் தெரியாமல், இல்லாமல் ஆட்டையைப் போட்டுவிடுவார்களோ என்ற எண்ணத்தில், அச்சத்தில்.. அத்தனை சுயநலம் !
இலேசாக புளிப்பு, ஆனால் பெரும்பாலும், கூசுகிற பற்களுக்கும் குந்தகம் இல்லாமல்! சூம்பிப்போய் கொட்டை மட்டும் பெரிதாய், சதை சிறிதாய் இல்லாமல் நல்ல பருமனானா மாங்காய்கள் இவை.. மல்கோவா மாம்பழம் போல் பெரிதாக ஒரு வகை, நீலம் போன்று கிளிமூக்கு இன்னொரு வகை. இரண்டுமே நல்ல சுவையான இரகங்களே.
இந்த மல்கோவா வகையில் மட்டும் சற்று நார் சேர்ந்து, அவற்றைக் மென்று சாப்பிட லாயக்கில்லை.. இந்த சக்கை சனியன்கள் பல்லிடுக்கில் மாட்டிக்கொண்டு, எடுக்கப்படும் பாடு சொல்லி மாளாது. அப்படியே பழரசமாக ஆக்கி வேண்டுமானால், குடிக்கலாம்!
கிளிமூக்கு இரகத்தில்தான், தளர் மாங்காய், கசுமாங்காய் (உப்புப் போட்டு உலர்ந்த மாங்காய்), தொக்கு, ஆவக்காய் போன்ற ஊறுகாய்களைப் போட்டுக்கொள்ளலாம்.
மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம் |
கிளிமூக்கு ஊறுகாய் மாங்காய் |
என்ன செய்ய...? மாற்றான் தோட்டத்து மாம்பழமாயினும், மணக்குதே... சுவைக்குதே.. ருசிக்குதே...!
பின்குறிப்பு:
இது ஒரு எச்சரிக்கையும் கூட..! இதை மற்ற விஷயங்களுக்குப் பொருத்திப் பார்க்காதீர்கள்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam