மே 23, 2017

மூகபஞ்சசதீ - ஸ்துதி சதகம் - 45

कृपाधाराद्रोणी कृपणधिषणानां प्रणमतां
निहन्त्री सन्तापं निगममुकुटोत्तंसकलिका
परा काञ्चीलीलापरिचयवती पर्वतसुता
गिरां नीवी देवी गिरिशपरतन्त्रा विजयते ४५॥

க்ருʼபாதாராத்³ரோணீ க்ருʼபண திஷணாநாம் ப்ரணமதாம்
நிஹந்த்ரீ ஸந்தாபம் நிக³ம முகுடோத்தம்ஸ கலிகா
பரா காஞ்சீ லீலா பரிசயவதீ பர்வதஸுதா
கி³ராம் நீவீ தே³வீ கி³ரிஶ பரதந்த்ரா விஜயதே 45

வணங்கும் அக்ஞானிகளுக்குக் கருணை வெள்ளம் நிறைந்த நீர் தேக்கம் போல் இல்வாழ்வின் தாபங்களை நீக்குவதாயும், வேதாந்தங்களுக்கு சிரத்தணி பூங்கொத்தாயும், வாக்குகளுக்கு முடிச்சாகவும், பரமசிவனுக்குட்பட்டவளாகவும், பர்தவகுமாரியுமான தேவி எங்குநிறைந்தவளாக விளங்குகிறாள்.

வணங்குபே தையர் வரவெள்ளம் ஆர்த்திடும் வாரியைப்போல்
தணலாமில் வாழ்விதன் தாபங்கள் நீக்கிடும், தன்மவுச்சி
மணக்கும்பூங் கண்ணியும் வாக்கிற்குக் கண்ணியும் மாதவர்க்குள்
அணங்காமி மாதேவி அன்னையன் எங்கும் அகன்றவளே!

பேதை-அறிவிலார்; வரம்-கருணை; ஆர்த்திடு-நிறைந்திடு; வாரி-நீர்தேக்கம்; தணல்-கனிந்த நெருப்பு; தாபம்-வெப்பம்; தன்மம்-வேதம்; உச்சி-முடி; மணக்கும்-பரந்த; கண்ணி-கொத்து,முடிச்சு; மா தவர்-சிவன்; இமா-இமவான் மகள்; அகன்ற-நிறைந்த

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):


வணங்கு பேதையர் வர வெள்ளம் ஆர்த்திடும் வாரியைப்போல், தணலாம் இல் வாழ்விதன் தாபங்கள் நீக்கிடும், தன்ம உச்சி மணக்கும் பூங்கண்ணியும் வாக்கிற்குக் கண்ணியும் மாதவர்க்குள் அணங்காம் இமா, தேவி அன்னையன் எங்கும் அகன்றவளே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...