सुधाडिण्डीरश्रीः स्मितरुचिषु तुण्डीरविषयं
परिष्कुर्वाणासौ परिहसितनीलोत्पलरुचिः ।
स्तनाभ्यामानम्रा स्तबकयतु मे काङ्क्षिततरुं
दृशामैशानीनां सुकृतफलपाण्डित्यगरिमा ॥ ४४॥
ஸுதா⁴ டி³ண்டீ³ரஶ்ரீ: ஸ்மிதருசிஷு துண்டீ³ர விஷயம்
பரிஷ்குர்வாணாஸௌ பரிஹஸித நீலோத்பல ருசி: ।
ஸ்தனாப்⁴யாமானம்ரா ஸ்தப³கயது மே காங்க்ஷித தரும்
த்³ருʼஶாமைஶானீநாம் ஸுக்ருʼத ப²லபாண்டி³த்ய க³ரிமா ॥ 44॥
அமுதத்தின் ஆடை (பாலாடை) போன்று புன்னகையின்
ஒளியுடைத்தாளும், தொண்டை நாடாம் காஞ்சியை அணிசெய்பவளும், நீலோத்பல ஒளியைப் பகடி (பரிகாசம்)
செய்யும் மேனியொளி கொண்டவளும், தனபாரத்தால் வளைந்தவளும், பரமசிவனின் கண்களின் நல்லூழ்
பயனானவளுமான இந்த தேவி என்னுள்ள விழைவான தருவைப் பூக்கச்செய்யட்டும்!
அமுதத்தின் ஆடைபோல் அந்த நகைபூண்ட, அஞ்சுநீல
குமுதத்தைக் கேலிசெய் கோள்மேனி கொண்ட, குழைந்தயிரு
அமுதகத் தாள்தொண்டை ஆதரம் அம்செய் அரன்விழிகட்
கமுதாய பேறே! கருவுற்றென் னாசை கனிதருவே!
ஆடை-நுரை; அந்தம்-ஒளி; அஞ்சு-அழகு;
நீலக்குமுதம்-நீலோத்பலம்; கோள்-ஒளி; குழைந்த-வளைந்த; அமுதகம்-கொங்கைகள்; தொண்டை ஆதரம்-காஞ்சி
நகர்; அம்-அழகு; பேறு-பயன்; கருவுற்று-மலர்ந்து; தரு-மரம்
பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):
அமுதத்தின் ஆடைபோல் அந்த நகை பூண்ட,
அஞ்சு நீலக் குமுதத்தைக் கேலி செய், கோள் மேனி கொண்ட, குழைந்த இரு அமுதகத்தாள் தொண்டை
ஆதரம் அம் செய் அரன்விழிகட்கு அமுதாய பேறாள்! கருவுற்று என்னாசை கனி தருவே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam