अनाद्यन्ता काचित्सुजननयनानन्दजननी
निरुन्धाना कान्तिं निजरुचिविलासैर्जलमुचाम् ।
स्मरारेस्तारल्यं मनसि जनयन्ती स्वयमहो
गलत्कम्पा शम्पा परिलसति कम्पापरिसरे ॥ ४३॥
அனாத்³யந்தா காசித் ஸுஜன நயனானந்த³ ஜனனீ
நிருந்தா⁴னா காந்திம் நிஜருசி விலாஸைர்
ஜலமுசாம் ।
ஸ்மராரேஸ் தாரல்யம் மனஸி ஜனயந்தீ ஸ்வயமஹோ
க³லத் கம்பா ஶம்பா பரிலஸதி கம்பா பரிஸரே ॥ 43॥
ஆதியந்தமில்லாததும்,
நல்லோர் விழிகட்கு மகிழ்வைத் தருவதும், தனது ஒளிப் பரவலால் மேகங்களின் ஒளியைத் தடை
செய்வதும், மன்மத* (வைரியார்) மனதில் சலனத்தை உண்டாக்குவதும், தான் அசைவற்றதுமான ஒரு மின்னலானது (காமாக்ஷி) கம்பை
நதிக்கரையில், தானாக விளங்கிடுதே!
*இராதா கிருஷ்ண ஸாஸ்திரிகள் உரை, “ஸ்மராரே” என்பதை
மன்மதனுடைய வைரியார் சிவனைக் குறிப்பதாகச் சொல்கிறது. ஆனால் “ஸமராரே” என்பது மன்மதனுடைய
என்றே பொருள் கொள்ளப்படவேண்டும். கணேசய்யர் உரையும் அவ்வாறே செய்கிறது.
ஆதியும் அந்தமும் அற்றது, நல்லோரின் அட்சயீர்க்கு
மோதமாம், தன்காந்தி மூட்டத்தில் மேகவெல் மூடிடுமாம்,
வேதியன் வைரி விளையுள்ள சைக்கும், விடையிலதாம்
சோதிமின் னல்லொன்று தூகம்பை தீரந்தான் சூழ்ந்திடுதே!
அட்சயீர்-கண்ணிரண்டு; மோதம்-மகிழ்ச்சில்;
மூட்டம்-பரவல்; எல்-ஒளி; வேதியன்-ஈசன்; விளையுள்-மனது; விடை-அசைவு; தூ-தூய
பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):
ஆதியும் அந்தமும் அற்றது, நல்லோரின் அட்ச
ஈர்க்கு மோதமாம், தன் காந்தி மூட்டத்தில் மேக எல் மூடிடுமாம் வேதியன் வைரி விளையுள்
அசைக்கும், விடை இலதாம் சோதி மின்னல்லொன்று தூ கம்பை தீரந்தான் சூழ்ந்திடுதே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam