மே 20, 2017

மூகபஞ்சசதீ - ஸ்துதி சதகம் - 42

असूयन्ती काचिन्मरकतरुचो नाकिमुकुटी-
कदम्बं चुम्बन्ती चरणनखचन्द्रांशुपटलैः
तमोमुद्रां विद्रावयतु मम काञ्चीर्निलयना
हरोत्सङ्गश्रीमन्मणिगृहमहादीपकलिका ४२॥

அஸூயந்தீ காசின் மரகத ருசோ நாகி முகுடீ-
கத³ம்ப³ம் சும்ப³ந்தீ சரணனக² சந்த்³ராம்ஶு படலை:
தமோ முத்³ராம் வித்³ரா வயது மம காஞ்சீர் நிலயனா
ஹரோத்ஸங்க³ ஸ்ரீமன் மணி க்³ருʼஹ மஹா தீ³பகலிகா 42

மரகத காந்திக்கு மாற்றலதும் வணங்கும் தேவர்களின் மணிமுடிகளைத் தொடுகின்ற கால் நகங்களாம் சந்திரர்களின் காந்திகளை உடையதும், பரமசிவனுடைய மடியாம் மங்கள இல்லத்தில் மஹா தீபம் போன்றதுமாம் காஞ்சியில் உறையும் தேவதையானது என்னுடைய அறியாமையாம் இருள் முடிச்சை நீக்கட்டுமே!

மரகத காந்திக்கு மாற்றலர் போன்ற, வணங்குதேவர்
சிரமுடி தீண்டிடும் சீர்கான கச்சந் திரவொளியார்,
அரன்மடி மங்கல ஆம்பெரு தீபமென் அன்னைகாஞ்சி
புரத்தினள் கண்ணியாம் புல்லறி வல்நீக்கிப் போக்குகவே!

மாற்றலர்-பகைவர்; சிரமுடி-மணிமுடி; கானகம்-கால் நகம்; ஆம்-அகம்/இல்லம்; கண்ணி-முடிச்சு; புல்லறிவு-அஞ்ஞானம்; அல்-இருள்

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):


மரகத காந்திக்கு மாற்றலர் போன்ற, வணங்கு தேவர் சிரமுடி தீண்டிடும் சீர் கால் நகச் சந்திரவொளி ஆர், அரன் மடி மங்கல ஆம் பெரு தீபம் என் அன்னை காஞ்சிபுரத்தினள், கண்ணியாம் புல்லறிவு அல் நீக்கி போக்குகவே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...