नमः स्तान्नम्रेभ्यः स्त
कलश भारेण गुरुणा
दधानेभ्यश्चूडाभरणममृतस्यन्दि शिशिरम् ।
सदा वास्तवेभ्यः सुविधभुवि कम्पाख्यसरिते
यशोव्यापारेभ्यः सुकृतविभवेभ्यो रतिपतेः ॥ ४१॥
நம: ஸ்தான் நம்ரேப்⁴ய: ஸ்தன கலஶ பா⁴ரேண கு³ருணா
த³தா⁴னேப்⁴யஶ் சூடா³ப⁴ரணமம்ருʼத ஸ்யந்தி³ ஶிஶிரம் ।
ஸதா³ வாஸ்தவேப்⁴ய: ஸுவித⁴பு⁴வி கம்பாக்²ய ஸரிதே
யஶோ வ்யாபாரேப்⁴ய: ஸுக்ருʼதவிப⁴வேப்⁴யோ ரதிபதே: ॥ 41॥
பெரும் தனக்குடங்களின் சுமையால்
வணங்கியவையும், அமுதம் பொழியும் குளிர்ந்த சூடிகையைத் தரிப்பவையும், கம்பையெனும் நதியருகே
எப்போதும் வசிப்பவையும், ரதிகாந்தனுடைய பெருமைக்கான செயல்களாயும் இருக்கும் புண்ணிய
விசேடத்தின் பொருட்டு (காமாட்சி) என் துதி இருக்கட்டும்.
பெரும்தனக் கும்பங்கள் பீரத்தால்
சாய்ந்து பிரார்த்தனைசெய்,
மருந்து பொழிதண் மணிமுடி பூண்கம்பை
மாநதிப்பால்
இருந்து இரதியின் இல்லாளன் ஈடதன்
ஏற்புடைத்தாய்
இருக்கும் அறத்தின் இருப்பிடத் தென்துதி
ஈண்டுகவே!
கும்பங்கள்-குடங்கள்;
பீரம்-பாரம்,சுமை; பிரார்த்தனை-வணங்கல்; மருந்து-அமுதம்; தண்-குளிர்; இல்லாளன்-கணவன்;
ஈடு-பெருமை; அறம்-புண்ணியம் ஈண்டுக-கூடுக.
பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):
பெரும் தனக்
கும்பங்கள் பீரத்தால் சாய்ந்து பிரார்த்தனைசெய், மருந்து பொழி தண் மணிமுடி பூண் கம்பை
மாநதிப்பால் இருந்து இரதியின் இல்லாளன் ஈடதன் ஏற்புடைத்தாய் இருக்கும் அறத்தின் இருப்பிடத்து
என் துதி ஈண்டுகவே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam