மே 16, 2017

மூகபஞ்சசதீ - ஸ்துதி சதகம் - 37

नयनयुगलीमास्माकीनां कदा नु फलेग्रहीं
विदधति गतौ व्याकुर्वाणा गजेन्द्रचमत्क्रियाम्
मरतकरुचो माहेशाना घनस्तननम्रिताः
सुकृतविभवाः प्राञ्चः काञ्चीवतंसधुरन्धराः ३७॥

நயனயுக³லீ மாஸ்மாகீநாம் கதா³ நு ²லேக்³ரஹீம்
வித³தி ³தௌ வ்யாகுர்வாணா ³ஜேந்த்³ர சமத்க்ரியாம்
மரதகருசோ மாஹேஶானா னஸ்தன ம்ரிதா:
ஸுக்ருʼத விபவா: ப்ராஞ்ச: காஞ்சீவதம்ஸ துரந்தரா: 37

பெண்யானைபோல் நடையழகும், மரகதம்போல் காந்தியும், தனங்களின் பாரத்தால் வணங்கிடும், காஞ்சிக்கு அலங்காரமுமாயிருக்கும், மகேசுவரனுடைய புண்ணிய விசேடமானவொன்று (காமாக்ஷி) என்னுடைய இருகண்களை எப்போது பயனடைந்தவையாகச் செய்யுமோ?

பிடிநடை அங்கமும் பிச்சைபோல் அஞ்சும் பெருங்கனத்த
வடிவங் கலிகள் வணங்கவும், காஞ்சியின் மண்டிதமாம்
நடிநாதன் புண்ணிய நற்சிறப் பொன்றென்று நற்பயனாய்
விடியுமோ என்றன் விழிகளுக் கென்று விழிக்கிறேனே!

பிடி-பெண்யானை; அங்கம்-அழகு; பிச்சை(பச்சை)-மரகதம்; அஞ்சு-ஓலி; வடிவி-அழகு; அங்கலிகள்-கொங்கைகள்; மண்டிதம்-அலங்காரம்; நடிநாதன்-சிவன்;

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):


பிடி நடை அங்கமும் பிச்சைபோல் அஞ்சும் பெருங்கனத்த வடிவு அங்கலிகள் வணங்கவும், காஞ்சியின் மண்டிதமாம், நடிநாதன் புண்ணிய நற் சிறப்பொன்று என்று நற்பயனாய் விடியுமோ என்றன் விழிகளுக்கென்று விழிக்கிறேனே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...