पुरदमयितुर्वामोत्सङ्गस्थलेन रसज्ञया
सरसकविताभाजा काञ्चीपुरोदरसीमया ।
तटपरिसरैर्नीहाराद्रेर्वचोभिरकृत्रिमैः
किमिव न तुलामस्मच्चेतो महेश्वरि गाहते ॥ ३६॥
புரத³மயிதுர் வாமோத்ஸங்க³ ஸ்த²லேன ரஸஜ்ஞயா
ஸரஸ கவிதாபா⁴ஜா காஞ்சீபுரோத³ர ஸீமயா ।
தடபரிஸரைர் நீஹாராத்³ரேர் வசோபி⁴ ரக்ருʼத்ரிமை:
கிமிவ ந துலாமஸ்மச்சேதோ மஹேஶ்வரி கா³ஹதே ॥ 36॥
மகேசுவரீ! என்மனது, புரவைரியின் இடமடியோடும்,
கவிசிரேட்டர்தம் நாக்குடனும், காஞ்சிபுரி எல்லையுடனும், இமயத்தின் கரைகளோடும், செய்யப்படாத
வாக்காம் வேதங்களுடனும் ஏன் இணை நிலையை அடையவில்லை?
மகதீ! எனது மனம்,புர வைரியின் வாமமடி
உகப்புடன், பாவலர் ஒள்நாவு டன்மேரு ஒக்கமுடன்
புகழ்மிகு காஞ்சி புரியெல்லை யோடும், புலந்தனோடும்,
உகந்தேன் சமநிலை உற்றிட மாட்டாது? ஓர்ப்பிலனே!
மகதீ-மகேசுவரி,பார்வதி; புரவைரி-சிவன்;
வாம-இடது; ஒள்நா-ஒளி/புகழ் மிக்க நா; மேரு-இமயம்; ஒக்கம்-கரை; புலன்-வேதம்; ஓர்ப்பு-தெளிவு;
பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):
மகதீ! எனது மனம், புரவைரியின் வாம மடி
உகப்புடன், பாவலர் ஒள் நாவுடன் மேரு ஒக்கமுடன், புகழ் மிகு காஞ்சிபுரி எல்லையோடும்,
புலந்தனோடும், உகந்தேன் சமநிலை உற்றிட மாட்டாது? ஓர்ப்பிலனே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam