मनसिजयशःपारम्पर्यं मरन्दझरीसुवां
कविकुलगिरां कन्दं कम्पानदीतटमण्डनम् ।
मधुरललितं मत्कं चक्षुर्मनीषिमनोहरं
पुरविजयिनः सर्वस्वं तत्पुरस्कुरुते कदा ॥ ३८॥
மனஸிஜயஶ: பாரம்பர்யம் மரந்த³ ஜரீஸுவாம்
கவிகுல கி³ராம் கந்த³ம் கம்பானதீ³தடமண்ட³னம் ।
மது⁴ரலலிதம் மத்கம் சக்ஷுர் மனீஷி மனோஹரம்
புரவிஜயின: ஸர்வஸ்வம் தத் புரஸ்குருதே கதா³ ॥ 38॥
மன்மதனின் பெருமைக்குப்
பரம்பரையும், அமுதமாய் பெருக்கும் கவிகளின் வாக்கிற்கு மூலமாயும், கம்பைக் கரைக்கு அணியாகவும், யோகியரின் மனதைக் கவருவதாயும்,
இனிதாயும், இலகுவாயும், பரமேசுவரனின் எல்லாச் செல்வமாகவும் விளங்கும் பொருள், எப்போது
என் கண்கள் முன்னே தோன்றுமோ?
மதனின் பெருமை வமிசமும், பாவலர் வான்கவிக்கு
விதையதும், கம்பை விளிம்பின் அணியும்,
விபோதருள
இதமும், இனிதும், இலகுவும் ஈசனின்
எல்லவுமாய்
விதந்து விளங்கிடும் வித்தமென் கண்முன்
விரைவதென்றே!
மதன்-மன்மதன்;
வமிசம்-பரம்பரை; வான்-அமுதம்; விதை-மூலம்; விளிம்பு-கரை; அணி-அலங்காரம்; விபோதர்-அறிஞர்;
விதந்து-மிகுந்து; வித்தம்-பொருள்
பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):
மதனின் பெருமை
வமிசமும், பாவலர் வான்கவிக்கு விதையதும், கம்பை விளிம்பின் அணியும், விபோதருள இதமும்,
இனிதும், இலகுவும் ஈசனின் எல்லவுமாய் விதந்து விளங்கிடும் வித்தமென் கண்முன் விரைவதென்றே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam