மே 13, 2017

மூகபஞ்சசதீ - ஸ்துதி சதகம் - 34

मम तु धिषणा पीड्या जाड्यातिरेक कथं त्वया
कुमुदसुषमामैत्रीपात्रीवतंसितकुन्तलाम्
शमित दुरितस्तम्भां कम्पानदीनिलयामसौ
श्रियति हि गलत्तन्द्रा चन्द्रावतंससधर्मिणीम् ३४॥

மம து திஷணா பீட்³யா ஜாட்³யாதிரேக கத²ம் த்வயா
குமுத³ ஸுஷமா மைத்ரீ பாத்ரீ வதம்ஸித குந்தலாம்
ஶமித து³ ரித ஸ்தம்பாம் கம்பாநதீ³ நிலயாமஸௌ
ஶ்ரியதி ஹி ³லத்தந்த்³ரா சந்த்³ரா வதம்ஸ ஸதர்மிணீம் 34

என் அறியாமையே! உன்னால் என்னறிவு எப்படி துன்புறுத்தப்படும்? அது ஆம்பலின் அழகுக்கு உற்ற நட்பான அம்புலியை அணியாக கேசத்தில் கொண்டவளும், பாபத் திரளைப் போக்குபவளும், கம்பைநதித் தடத்தில் உள்ளவளுமான சந்திரசேகரரின் பத்தினியையே சோம்பலின்றி விரும்பி நிற்கின்றதல்லவா!

ஆம்பலம் பின்தோழன் அல்லோனை கேசம் அணிந்துபுன்மை
தீம்பெனும் பாபத் திரள்போக்கிக் கம்பையின் தீரமதில்
தாம்வாழ் மதியைத் தரித்தாரில் சோம்பின்றி தாமுகக்கு
மாம்ஞானம் துன்புறல் மற்றெவ் விதமென் மயலறிவே

ஆம்பல்+அம்-ஆம்பலின் அழகு; அல்லோன்-சந்திரன்; புன்மை-இழிவு; தீம்பு -தீய குறும்பு; இல்-மனைவி; உகக்குமாம்- விரும்புமாம்; மயல்-அறிவு மயக்கம்;

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):

ஆம்பல் அம்பின் தோழன் அல்லோனை கேசம் அணிந்து புன்மை தீம்பெனும் பாபத் திரள் போக்கிக் கம்பையின் தீரமதில்தாம் வாழ் மதியைத் தரித்தார் இல் சோம்பின்றி தாம் உகக்குமாம் ஞானம் துன்புறல் மற்று எவ்விதம் என் மயலறிவே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...