मुनिजनमोधाम्ने धाम्ने वचोमयजाह्नवी-
हिमगिरितटप्राग्भारायाक्षराय परात्मने ।
विहरणजुषे काञ्चीदेशे महेश्वरलोचन-
त्रितयसरसक्रीडासौधाङ्गणाय नमो नमः ॥ ३०॥
முனிஜன மனோதா⁴ம்னே தா⁴ம்னே வசோமய ஜாஹ்னவீ-
ஹிமகி³ரிதட ப்ராக்³பா⁴ராயாக்ஷராய பராத்மனே ।
விஹரண ஜுஷே காஞ்சீ தே³ஶே மஹேஶ்வர லோசன-
த்ரிதய ஸரஸக்ரீடா³
ஸௌதா⁴ங்க³ணாய நமோ நம: ॥ 30॥
முனிவர்கள் மனங்களில் தங்குவதும், வாக்காம்
கங்கைப் பெருகிவர இமயமலைகளால் கரையாகவும், அழிவற்றதும், பரம்பொருளும், காஞ்சியில் விளையாடுவதும்,
மகேசனின் மூன்று கண்களுக்கும் விளையாட மேன்மாடமாயும் இருக்குமொன்றை நான் வணங்குகிறேன்.
இருடிகள் உள்ளம் இருப்பதும், வாக்காம் இனியகங்கைப்
பெருக்கின் இமயத்துப் பித்தலும், குன்றாப் பெரும்பரமும்,
அருட்காஞ்சி ஆடும் அரனாரின் முக்கண்கள் ஆடுமுற்றம்
இருக்கும் பொருளினை என்றும் வணங்கி இருக்கிறேனே!
இருடிகள்-முனிவர்;
பித்தல்-கரை; ஆடு-விளையாடுதல்; முற்றம்-மேன்மாடம்
பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):
இருடிகள் உள்ளம் இருப்பதும், வாக்காம்
இனியகங்கைப் பெருக்கின் இமயத்துப் பித்தலும், குன்றாப் பெரும்பரமும், அருட்காஞ்சி ஆடும்
அரனாரின் முக்கண்கள் ஆடுமுற்றம் இருக்கும் பொருளினை என்றும் வணங்கி இருக்கிறேனே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam