மே 08, 2017

மூகபஞ்சசதீ - ஸ்துதி சதகம் - 29

मुनिजनमनःपेटीरत्नं स्फुरत्करुणानटी-
विहरणकलागेहं काञ्चीपुरीमणिभूषणम्
जगति महतो मोहव्याधेर्नृणां परमौषधं
पुरहरदृशां साफल्यं मे पुरः परिजृम्भताम् २९॥

முனிஜன மன: பேடீரத்னம் ஸ்பு²ரத் கருணானடீ-
விஹரண கலா கே³ஹம் காஞ்சீ புரீமணி பூஷணம்
ஜக³தி மஹதோ மோஹவ்யாதேர் ந்ருʼணாம் பரமௌஷதம்
புரஹர த்³ருʼஶாம் ஸாப²ல்யம் மே புர: பரிஜ்ருʼம்பதாம் 29

இருடியர்தம் மனப்பெட்டியில் உள்ள இரத்தினமும், ஒளிரும் கருணையாம் நடனப்பெண்ணின் ஆடுந்திறமைக்கு இருப்பிடமும், காஞ்சிநகரின் இரத்தின அணிகலனும், உலகில் மனிதரின் மிகவும் பெரிய அறியாமை நோய்க்கு உயர் மருந்தும், புரங்களழித்தார்தம் கண்களுக்குப் நிறைந்த பயனும் ஆனவொன்று என்னெதிரில் தோன்றட்டுமே!

இருடியர் உட்பேழை எல்மணி யும்பொம்ம இன்னருளாம்
நிருத்தர் நடனம் நிறைகாஞ்சி யூர்பூண் நிதானமதால்
அருங்கல மும்பூவில் அஞ்ஞான நோய்க்கோர் அருமருந்தும்
புரமெரித் தார்கண் புரிபயன் ஒன்று(ஸ்) புரிக்கமுன்பே!

இருடியர்-முனிவர்ல் உட்பேழை-மனமாம் பெட்டி; எல்-ஒளி; மணி-இரத்தினம்; பொம்ம-ஒளிர்; நிருத்தர்-நடனமங்கையர்; நிதானம்-இரத்தினம்; அருங்கலம்-ஆபரணம்; பூ-உலகம்; புரிக்க-தோன்றுக (ஸ்புரித்தல்)

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):


இருடியர் உட்பேழை எல் மணியும் பொம்ம இன்னருளாம், நிருத்தர் நடனம் நிறை காஞ்சியூர் பூண் நிதானமதால் அருங்கலமும் பூவில் அஞ்ஞான நோய்க்கோர் அருமருந்தும், புரமெரித்தார் கண் புரி பயன் ஒன்று (ஸ்)புரிக்கமுன்பே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...