மே 10, 2017

மூகபஞ்சசதீ - ஸ்துதி சதகம் - 31

मरकतरुचां प्रत्यादेशं महेश्वरचक्षुषाम्
अमृतलहरीपूरं पारं भवाख्यपयोनिधेः
सुचरितफलं काञ्चीभाजो जनस्य पचेलिमं
हिमशिखरिणो वंशस्यैकं वतंसमुपास्महे ३१॥

மரகதருசாம் ப்ரத்யாதே³ஶம் மஹேஶ்வர சக்ஷுஷாம்
அம்ருʼதலஹரீ பூரம் பாரம் வாக்²ய பயோனிதே:
ஸுசரிதப²லம் காஞ்சீபாஜோ ஜனஸ்ய பசேலிமம்
ஹிம ஶிக²ரிணோ வம்ஶஸ்யைகம் வதம்ஸமுபாஸ்மஹே 31

மரகதப் பச்சைக்கு மாற்றும், மகேசனின் கண்களுக்கு அமிருத அருவிப்பெருக்கும், இல்வாழ்வெனும் கடலுக்குக் கரையாயும், காஞ்சியில் இருக்கும் மாந்தரின் பழுத்த புண்ணிய பலனும், இமயமலை வமிசத்தின் ஒரே அணிகலனுமான ஒன்றை வழிபடுகிறோம்.

மரகதப் பச்சைக்கு மாற்றும், மகேசரின் வாமவிழி
இரண்டின் அமுதூற்றும், இல்வாழ்வு ஆழி இருகரையும்,
புரக்காஞ்சி மாந்தர் புரிநல்லூழ் ஆறதும், பூதரத்து
மரபினொன் றேயாம் வயக்கணி யையாம் வழுத்துவமே!

வாமம்-அழகு; ஆழி-கடல்; ஆறு-பயன்; பூதரம்-இமயம்; மரபு-வமிசம்; வயக்கு-ஒளி; வழுத்து-வழிபடு

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):


மரகதப் பச்சைக்கு மாற்றும், மகேசரின் வாமவிழி, இரண்டின் அமுதூற்றும், இல்வாழ்வு ஆழி இருகரையும், புரக்காஞ்சி மாந்தர் புரிநல்லூழ் ஆறதும், பூதரத்து மரபினொன் றேயாம் வயக்கணி யையாம் வழுத்துவமே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...