ஏப்ரல் 20, 2017

மூகபஞ்சசதீ - ஸ்துதி சதகம் - 11

राकाचन्द्रसमानकान्तिवदना नाकाधिराजस्तुता
मूकानामपि कुर्वती सुरधुनीनीकाशवाग्वैभवम्
श्रीकाञ्चीनगरीविहाररसिका शोकापहन्त्री सताम्
एका पुण्यपरम्परा पशुपतेराकारिणी राजते ११॥

ராகாசந்த்³ர ஸமான காந்தி வத³னா நாகாதிராஜ ஸ்துதா
மூகாநாமபி குர்வதீ ஸுரதுனீ நீகாஶ வாக்³வைபவம்
ஸ்ரீகாஞ்சீ நக³ரீ விஹாரரஸிகா ஶோகாபஹந்த்ரீ ஸதாம்
ஏகா புண்ய பரம்பரா பஶுபதேராகாரிணீ ராஜதே 11

பரமசிவனின் புண்ணியமே உருவாய் வந்தாற்போல் தோன்றும் தேவியொருவள் (காமாக்ஷி), முழுநிலவைப் போல் முகவொளியுடன், இந்திராதிகளால் துதிக்கப்பட்டு, ஊமையருக்கும் கூட கங்கைப் பெருக்கனைய வாக்கு வன்மையைத் தந்து, காஞ்சீ நகரில் விளையாடுவதில் தேர்ந்த இரசிகையாகி, நல்லோரின் துயர்களையும் நீக்குகிறாள்

பசுபதி புண்ணியம் பாலிக்கும் தோற்றத்தில் பண்ணவியாய்
பசுங்கதிர் பூரணன் பாம முகத்துடன் பார்கரியும்
விசும்பரும் போற்றிடு வெள்ளகங் கைவாக்கின் வீச்சைமூக
சிசுக்கீயும்; துன்பாற்றும்; சீர்காஞ்சி யில்கேளி தேர்ந்திடுமே!

பண்ணவி-தேவி; பசுங்கதிர் பூரணன்-முழுநிலவன்; பாம-ஒளி; பார்கரி-இந்திரன்; விசும்பர்-தேவர்; வீச்சு-வல்லமை;

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):


பசுபதி புண்ணியம் பாலிக்கும் தோற்றத்தில் பண்ணவியாய், பசுங்கதிர் பூரணன் பாம முகத்துடன் பார்கரியும், விசும்பரும் போற்றிடு வெள்ள கங்கை வாக்கின் வீச்சை மூகசிசுக்கீயும்; துன்பாற்றும்; சீர்காஞ்சியில் கேளி தேர்ந்திடுமே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...