कान्तैः केशरुचां चयैर्भ्रमरितं मन्दस्मितैः पुष्पितं
कान्त्या पल्लवितं पदाम्बुरुहयोर्नेत्रत्विषा पत्रितम् ।
कम्पातीरवनान्तरं विदधती कल्याणजन्मस्थली
काञ्चीमध्यमहामणिर्विजयते काचित्कृपाकन्दली ॥ १०॥
காந்தை: கேஶருசாம் சயை: ப்⁴ரமரிதம் மந்த³ ஸ்மிதை: புஷ்பிதம்
காந்த்யா பல்லவிதம் பதா³ம்பு³ருஹயோ: னேத்ரத்விஷா பத்ரிதம் ।
கம்பாதீரவனாந்தரம் வித³த⁴தீ கல்யாண ஜன்ம ஸ்த²லீ
காஞ்சீ மத்⁴ய மஹாமணி: விஜயதே காசித் க்ருʼபாகந்த³லீ ॥ 10॥
கருணாநிதியும்,
காஞ்சி நடுவில் வீற்ற இரத்தினமும், மங்களத்திற்குப் பிறப்பிடமாகவும் உள்ள தேவி ஒருவள்,
தனது கேசங்களின் ஒளியால், கம்பைத் தடத்தில் நந்தவனத்தின் வண்டுகளாய், புன்சிரிப்பால்
மலர்வாய், அருளடியால் துளிர்த்து, அழகுக் கண்களால் இலைகளாயும் ஒளிர்கிறாள்.
கருணையாம் செல்வமும், காஞ்சி நடுவில்
கழுமணியும்
திருசுப மாயுமு திக்கின்ற தேவி,
சிகையதனால்
கரைக்கம்பை காட்டின் கழுதாக, புன்னகைக்
கண்மலர்வாய்
அருளடி யால்துளிர், அம்விழி யால்சாகம்
ஆமொளிர்ந்தே!
கழுமணி-இரத்தினம்;
திருசுபம்-மங்களம்; கழுது-வண்டுகள்;
பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):
கருணையாம்
செல்வமும், காஞ்சி நடுவில் கழுமணியும், திருசுபமாயும் உதிக்கின்ற தேவி, சிகையதனால்,கரைக்
கம்பை காட்டின் கழுதாக, புன்னகைக்கண், மலர்வாய், அருளடியால் துளிர், அம் விழியால் சாகம்,
ஆமொளிர்ந்தே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam