नित्यं निश्चलतामुपेत्य मरुतां रक्षाविधिं पुष्णती
तेजस्संचयपाटवेन किरणानुष्णद्युतेर्मुष्णती ।
काञ्चीमध्यगतापि दीप्तिजननी विश्वान्तरे जृम्भते
काचिच्चित्रमहो स्मृतापि तमसां निर्वापिका दीपिका ॥ ९॥
நித்யம் நிஶ்சலதாமுபேத்ய மருதாம் ரக்ஷாவிதி⁴ம் புஷ்ணதீ
தேஜஸ்ஸம்சயபாடவேன கிரணானுஷ்ணத்³யுதேர்முஷ்ணதீ ।
காஞ்சீமத்⁴யக³தாபி தீ³ப்திஜனனீ விஶ்வாந்தரே ஜ்ருʼம்ப⁴தே
காசிச்சித்ரமஹோ ஸ்ம்ருʼதாபி தமஸாம் நிர்வாபிகா தீ³பிகா ॥ 9॥
தானெப்போதும்
அசையா நிலையில் இருந்துகொண்டு, காற்று தேவதைகளைக் காக்கிறது; சூரியனின் தேசையும் மறைக்கிறது;
காஞ்சியில் இருந்தாலும் (ஒட்டியாணம்) உலகமுழுவதும் ஒளியைப் பரப்புகிறது; நினைத்தமாத்திரமே
இருளை நீக்குவது. அத்தகைய அற்புத விளக்காக தேவி உயர்ந்திருப்பது ஒர் ஆச்சரியமே!
அசையா ததென்றும், அளிதரும் காற்றுக்கும்
ஆயினது;
இசைந்தது காஞ்சி எனினும் புவனத்தின்
எல்லளிக்கும்;
நிசாரியின் தேசை நிறைநீக்கும்; அல்லை
நினைக்கினீக்கும்;
இசைகொள் விளக்காய் இருக்கும்விந்
தையந்த ஏற்றமன்றே!
அளிதரும்-காக்கும்;
நிசாரி-சூரியன்; நிறை-மேன்மை;
பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):
அசையாது அது
என்றும், அளி தரும் காற்றுக்கும் ஆயின் அது; இசைந்தது, காஞ்சி எனினும், புவனத்தின்
எல்லளிக்கும்; நிசாரியின் தேசை நிறை நீக்கும்; அல்லை நினைக்கின் நீக்கும்; இசைகொள்
விளக்காய் இருக்கும் விந்தையந்த ஏற்றமன்றே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam