तन्द्राहीनतमालनीलसुषमैस्तारुण्यलीलागृहैः
तारानाथकिशोरलाञ्छितकचैस्ताम्रारविन्देक्षणैः ।
मातः संश्रयतां मनो मनसिजप्रागल्भ्यनाडिन्धमैः
कम्पातीरचरैर्घनस्तनभरैः पुण्याङ्करैः शांकरैः ॥ ८॥
தந்த்³ராஹீன தமால நீல ஸுஷமைஸ் தாருண்ய லீலாக்³ருʼஹை:
தாரானாத² கிஶோர லாஞ்சி²த கசைஸ் தாம்ரார விந்தே³க்ஷணை: ।
மாத: ஸம்ஶ்ரயதாம் மனோ மனஸிஜ ப்ராக³ல்ப்⁴ய நாடி³ந் த⁴மை:
கம்பாதீர சரைர் க⁴னஸ்தனப⁴ரை: புண்யாங்குரை: ஶாம்கரை: ॥ 8॥
வாடா தமால மலர்களின் நீலவொளியோடு கூடியவையும், இளமை விளங்கும் வீடுகளும், இளமதியால்
ஒளிரும் கூந்தலுடையவையும், செந்தாமரைக் கண்களுடையவையும், மன்மதனுடைய பெருமைக்கு வலு
கொடுப்பவையும், கம்பைக் கரையில் உலவுவையும், கடின தனங்களுடன் கூடியவையுமான சங்கரனுடைய
நல்லூழ் முளைகளுடன் என்மனம் ஒன்றுபடட்டும்.
கருகா தமால கருநீலக் காழ்கொள்ளும்,
கட்டிளமை
பெருகு மிடமிள பேனன் ஒளிர்கூந்தல்,
பிங்ககற்கம்
இருவிழி கள்,வேளெல் ஏற்றும்,
தடக்கம்பை ஈண்டுலவும்,
குருத்தனம் கூடிடும்,
கோமுறைக் காலென்னுள் கூடுகவே!
கருகா-வாடா; காழ்-ஒளி; பேனன்-சந்திரன்; பிங்கம்- பொன்மைச் சிவப்பு; கற்கம்-தாமரை;
வேள்-மன்மதன்; எல்-பெருமை; ஏற்றும்-வலிமைப் படுத்தும்; தடக்கம்பை-கம்பையாற்றங் கரை;
ஈண்டு-விரைந்து; குரு-கடின; கோ-சிவன்; முறை-ஊழ்; கால்-முளை; கூடு-ஒன்றுக; உள்ளே-மனத்திலே
[மீண்டுமொரு மொழி பெயர்க்கக் கடினமான பாடல்]
பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):
கருகா தமால கரு நீலக்காழ் கொள்ளும், கட்டிளமை பெருகுமிடம், இள பேனன் ஒளிர் கூந்தல்,
பிங்க கற்கம் இரு விழிகள், வேளெல் ஏற்றும், தடக் கம்பை ஈண்டுலவும், குருத் தனம் கூடிடும்,
கோமுறைக் கால் என்னுள் கூடுகவே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam