ஏப்ரல் 16, 2017

மூகபஞ்சசதீ - ஸ்துதி சதகம் - 07

प्रौढध्वान्तकदम्बके कुमुदिनीपुण्यांकुरं दर्शयन्
ज्योत्स्नासंगमनेऽपि कोकमिथुनं मिश्रं समुद्भावयन्
कालिन्दीलहरीदशां प्रकटयन्कम्रां नभस्यद्भुतां
कश्चिन्नेत्रमहोत्सवो विजयते काञ्चीपुरे शूलिनः ७॥

ப்ரௌடத்வாந்தகத³ம்ப³கே குமுதி³னீ புண்யாங்குரம் ³ர்ஶயன்
ஜ்யோத்ஸ்னா ஸம்க³மனேபி கோக மிது²னம் மிஶ்ரம் ஸமுத்³பாவயன்
காலிந்தீ³லஹரீத³ஶாம் ப்ரகடயன் கம்ராம் நபஸ்யத்³புதாம்
கஶ்சின் நேத்ர மஹோத்ஸவோ விஜயதே காஞ்சீபுரே ஶூலின: 7

காஞ்சியில் சூலபாணி கண்களுக்கு மகிழ்ச்சி தருமொன்று உள்ளது. அது இருள்போலாம் கருங்கூந்தலில் அல்லியின் நல்வினைப் பயனின் முளையாம் பிறைச்சந்திரனைச் சூடியது; அதன் புன்சிரிப்பாம் நிலவில் இரு கருத்த கண்களின் ஒளியானது சக்கரவாகப் பறவைகள் கூடுவது போலுள்ளது; அதன் ஆகாயமன்ன இடுப்பின்மேல் யமுனை அலைகளாம்;

அல்லிருள் கூந்தலில் அல்லியின் நல்வினை அங்குரமாய்
அல்லோன் பிறைசூடும்; அம்நகை சீதத்தில் அட்சவொளி,
தல்லல்கோ கங்களின்; தாரா பதமேல் தவழ்யமுனைக்
கல்வம் அதுசூலர் கண்களுக் கார்ப்பீயும் காஞ்சியிலே!

அல்-கருமை; அல்லி-குமுதமலர்; அங்குரம்-முளை; அல்லோன்-நிலவு; அம்நகை-அழகு நகை (புன்னகை); சீதம்-சந்திரன்; அட்சவொளி-விழிகளின் ஒளி; தல்லல்-புணர்தல்; கோகங்கள்-சகோரங்கள்; தாராபதம்-வானம்; கல்வம்-அலை/லஹரி; சூலர்-பரமசிவன்; ஆர்ப்பு-மகிழ்ச்சி.

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):


அல்லிருள் கூந்தலில் அல்லியின் நல்வினை அங்குரமாய் அல்லோன் பிறைசூடும்; அம்நகை சீதத்தில் அட்சவொளி, கோகங்களின் தல்லல்; தாரா பதம் மேல் தவழ் யமுனைக் கல்வம்; அது சூலர் கண்களுக்கு ஆர்ப்பு ஈயும் காஞ்சியிலே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...