ஏப்ரல் 11, 2017

மூகபஞ்சசதீ - ஸ்துதி சதகம் - 02

तापिञ्छस्तबकत्विषे तनुभृतां दारिद्र्यमुद्राद्विषे
संसाराख्यतमोमुषे पुररिपोर्वामाङ्कसीमाजुषे
कम्पातीरमुपेयुषे कवयतां जिह्वाकुटीं जग्मुषे
विश्वत्राणपुषे नमोऽस्तु सततं तस्मै परंज्योतिषे २॥

தாபிஞ்ச² ஸ்தப³கத்விஷே தனுப்ருʼதாம் தா³ரித்³ர்ய முத்³ராத்³விஷே
ஸம்ஸாராக்²ய தமோமுஷே புரரிபோர் வாமாங்கஸீமா ஜுஷே
கம்பாதீர முபேயுஷே கவயதாம் ஜிஹ்வாகுடீம் ஜக்³முஷே
விஶ்வத்ராணபுஷே நமோஸ்து ஸததம் தஸ்மை பரம்ஜ்யோதிஷே 2

காயாம் பூங்கொத்தின் காந்தி கொண்டதும், மக்களின் ஏழ்மைக் குறியொழிப்பதும், சம்சார இருளை நீக்குவதும், பரமசிவனாரில் இடதுமடியில் இடம்பெற்றதும், கம்பை நதிக்கரை அடைந்ததும், காவியமியற்றும் கவிஞரின் நாவை அடைவதும், உலகைக் காப்பை விருத்தி செய்வதும், உயர்ந்த ஒளியுமானதற்கு எப்போதும் வணக்கங்கள்!

காசாம்பூங் கண்ணியின் காந்திகொள், கங்காளி கள்வறுமை
நாசம்செய், சம்சார நத்தத்தை நீக்கிடும், நக்கனிட
வாசனம் வீற்று, வழாறுகம் பைசெல்லும், வாக்கினர்நா
பேசும்,பூ வைக்காக்கும் பேரொளிக் கென்றும் பிரார்த்தனையே!

காசாம்பூ-காயாம்பூ (நீல மலர்); கண்ணி-கொத்து; கங்காளிகள்-ஏழையர்; நத்தம்-இருள்; நக்கன்-சிவன்; வழாறு-நிறைபுனலுள்ள நதி; பூ-உலகு;

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):


காசாம் பூங்கண்ணியின் காந்தி கொள், கங்காளிகள் வறுமை நாசம்செய், சம்சார நத்தத்தை நீக்கிடும், நக்கன் இடவாசனம் வீற்று, வழாறு கம்பை செல்லும், வாக்கினர் நாபேசும், பூவைக்காக்கும் பேரொளிக்கென்றும் பிரார்த்தனையே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...