ये सन्ध्यारुणयन्ति शंकरजटा
कान्तार चन्द्रार्भकं
सिन्दूरन्ति च ये पुरन्दरवधूसीमन्तसीमान्तरे ।
पुण्यं ये परिपक्वयन्ति भजतां काञ्चीपुरे माममी
पायासुः परमेश्वरप्रणयिनीपादोद्भवाः पांसवः ॥ ३॥
யே ஸந்த்⁴யாருணயந்தி ஶம்கரஜடா காந்தார
சந்திரார்ப⁴கம்
ஸிந்தூ³ரந்தி ச யே புரந்த³ரவதூ⁴ ஸீமந்த ஸீமாந்தரே ।
புண்யம் யே பரிபக்வயந்தி ப⁴ஜதாம் காஞ்சீபுரே மாமமீ
பாயாஸு: பரமேஶ்வர ப்ரணயினீ பாதோ³த்³ப⁴வா: பாம்ஸவ: ॥ 3॥
பரமேசுவரரின்
இனிய பத்தினியின் (காமாக்ஷி) பாததூளித் தொடர்பு, சிவனின் சடைக்காட்டில் வசிப்பவனான
இளஞ்சந்திரனுக்கு மாலை நேரத்து செந்நிறம் தருகிறது. புரந்தரன் மனையாளின் தலை வகிட்டுப்
பிரிவினூடே தரித்த சிந்தூரப்பொட்டாகிறது. காஞ்சியை அடைந்தவர்களுடைய சேமத்தை இந்த பாததூளி
பரிபக்குவமைடையச் செய்கிறது. அவை என்னையும் காப்பாற்றட்டும்.
பரமேசன் பத்தினிப்
பாதத் தடிபொடி பந்தமதால்,
அரன்சடைக்
காட்டிளம் அம்புலி காணும் அரத்தநிறம்;
சுரபதி பங்கியின்
சூடை வகிடுசிந் தூரமுறும்;
பரிபணம் காஞ்சியைப்
பட்டார்க்கும்; காவது பார்த்தெனையே!
பந்தம்-தொடர்பு; அரத்தம்-செந்நிறம்; சுரபதி-இந்திரன்;
பங்கி-மனைவி, சூடை-தலை; பரிபணம்-பரிபக்குவம்; பட்டார்க்கு-அடைந்தார்க்கு; கா-காக்கட்டும்;
பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):
பரமேசன் பத்தினிப்
பாதத்து அடிபொடி பந்தமதால், அரன் சடைக்காட்டு இளம் அம்புலி காணும் அரத்த நிறம்; சுரபதி
பங்கியின் சூடை வகிடு சிந்தூரமுறும்; பரிபணம் காஞ்சியைப் பட்டார்க்கும்; காவது பார்த்தெனையே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam