कामाडम्बरपूरया शशिरुचा कम्रस्मितानां त्विषा
कामारेरनुरागसिन्धुमधिकं कल्लोलितं तन्वती ।
कामाक्षीति समस्तसज्जननुता कल्याणदात्री नृणां
कारुण्याकुलमानसा भगवती कम्पातटे जृम्भते ॥ ४॥
காமாட³ம்ப³ர பூரயா ஶஶிருசா கம்ரஸ்மிதாநாம் த்விஷா
காமாரேரனுராக³
ஸிந்து⁴மதி⁴கம் கல்லோலிதம் தன்வதீ ।
காமாக்ஷீதி ஸமஸ்த ஸஜ்ஜனனுதா கல்யாணதா³த்ரீ ந்ருʼணாம்
காருண்யாகுல மானஸா ப⁴க³வதீ கம்பாதடே ஜ்ருʼம்ப⁴தே ॥ 4॥
காமனுடைய கேளிகளை வளர்ப்பவளும், சந்திரகாந்திபோல்
மென்னகை உள்ளவளும், காமவைரியாருடைய அன்புக்கடலைப் பொங்கியெழச் செய்பவளும், நல்லோரால்
துதிக்கப்படுபவளும், நலங்களை அளிப்பவளும், கருணைநிறை மனதினளுமான பகவதியாம் காமாட்சி
கம்பைக் கரையில் களிப்புடன் இருக்கிறாள்.
காமன வன்கேளி கள்வளர், சந்திர காந்திநகை
தாமுடை, காமற்குத் தாவன்பு சாகரத் தையெழச்செய்
நேமர் துதித்திடும், நேயம்செய் தண்ணளி நெஞ்சினளாம்
காமாட்சி, கம்பைக் கரைமேல், பகவதி! காண்களித்தே!
கேளி-விளையாட்டு; காமன்-மன்மதன்;
தா-பகை; நேமர்-நல்லோர்; நேயம்-நன்மை/நலம்; தண்ணளி-கருணை;
பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):
காமனவன் கேளிகள் வளர், சந்திரகாந்தி
நகைதாம் உடை, காமற்குத்தா, அன்பு சாகரத்தை எழச்செய், நேமர் துதித்திடும், நேயம்செய்,
தண்ணளி நெஞ்சினளாம் காமாட்சி,பகவதி, கம்பைக் கரைமேல்,காண்களித்தே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam