ஏப்ரல் 14, 2017

மூகபஞ்சசதீ - ஸ்துதி சதகம் - 05

कामाक्षीणपराक्रमप्रकटनं सम्भावयन्ती दृशा
श्यामा क्षीरसहोदरस्मितरुचिप्रक्षालिताशान्तरा
वामाक्षीजनमौलि भूषणरुसि: वाचां परा देवता
कामाक्षीति विभाति कापि करुणा कम्पातटिन्यास्तटे ५॥

காமாக்ஷீண பராக்ரமப்ரகடனம் ஸம்பாவயந்தீ த்³ருʼஶா
ஶ்யாமா க்ஷீரஸஹோத³ரஸ்மிதருசி ப்ரக்ஷாலிதாஶாந்தரா
வாமாக்ஷீஜனமௌலி பூஷணருசி: வாசாம் பரா தே³வதா
காமாக்ஷீதி விபாதி காபி கருணா கம்பா தடின்யா ஸ்தடே 5

தனது கண்ணால், காமனுடைய குறைவற்ற சக்தியின் வெளிப்பாட்டை பாராட்டுபவளும், தனது பாலன்ன புன்சிரிப்பின் ஒளியால், திசைகளைத் தூய்மை செய்பவளும், கண்ணழகிகளின் சிரவணியானவளும், வேதவாக்குகளுக்கு, உயர் தேவதையாய், காமாக்ஷி என்னும் ஒரு கருணாமூர்த்தியானது, கம்பா நதிக் கரையில் ஒளிர்கிறது.

தன்கண்ணால் காமனின் சாய்வற்ற சக்தியைத் தாற்பரிக்கும்,
தன்பால் நகைய தனொளியில் தூவாய்தி சைகளாக்கும்,
தன்மைக்கண் பெண்கள் தலையணி யும்வே தவாக்கினுயர்
கன்னியள் காமாட்சி கம்பைக் கரைவாழ் கருணையஞ்சே!

சாய்வற்ற-குறைவற்ற; தாற்பரியம்-பாராட்டு; பால்நகை-பால்போல் வெண்நகை; தூ-தூய்மை; தன்மை-அழகு; கன்னி-தவப்பெண்; அஞ்சு-ஒளி;

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):


தன் கண்ணால் காமனின் சாய்வற்ற சக்தியைத் தாற்பரிக்கும், தன் பால் நகையதன் ஒளியில் தூவாய் திசைகளாக்கும், தன்மைக் கண் பெண்கள் தலை அணியும், வேத வாக்கின் உயர் கன்னியள் காமாட்சி கம்பைக் கரைவாழ் கருணை அஞ்சே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...