श्रीकामाक्षि महेश्वरे निरुपमप्रेमाङ्कुरप्रक्रमम्ं
नित्यं यः प्रकटीकरोति सहजामुन्निद्रयन्माधुरीम् ।
तत्तादृक्तव मन्दहासमहिमा मातः कथं मानितां
तन्मूर्ध्ना सुरनिम्नगां च कलिकामिन्दोश्च तां निन्दति ॥ ७७॥
ஸ்ரீகாமாக்ஷி! மஹேஶ்வரே நிருபம ப்ரேமாங்குர ப்ரக்ரமம்
நித்யம் ய: ப்ரகடீகரோதி ஸஹஜா முன்னித்³ரயன் மாது⁴ரீம் ।
தத்தாத்³ருʼக் தவ மந்த³ஹாஸ ஸுஷமா (மஹிமா) மாத: கத²ம் மானிதாம்
தன்மூர்த்⁴னா ஸுர நிம்னகா³ம் ச கலிகா மிந்தோ³ஶ்ச தாம் நிந்த³தி ॥ 77॥
அன்னையே! திரு காமாக்ஷீ! இயல்பில்
இனிமையையும், மகேசனிடம் ஒப்பற்ற அன்பின் முளை வளர்ச்சியை தினமும் வெளிப்படுத்தும்,
உன் புன்னகையின் ஒளி அல்லது மகிமை, அந்த பரசிவனார் சிரத்தால் பெருமை செய்யப்பட்ட தேவ
கங்கையையும், சந்திரனது கலையையும் ஏன் நிந்திக்கிறது.?
இனிய இயல்புகொள், ஈசருக் கீடற்ற இட்டமுளை
தனின்வளர் வைநாளும் தான்காட்டும் உன்னகை சாய்திருசி
வனினொண் சிரத்தில் மகிமைகொள் கங்கையை மப்பிறையை
கனிவின்றி, காமாட்சி, காய்த்தலென் தாயேசொல் காரணமே!
இட்டம்-அன்பு;
சாய்-ஒளி; ம-சந்திரன்; காய்த்தல்-நிந்தித்தல்
பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):
இனிய இயல்புகொள், ஈசருக்க்
ஈடற்ற இட்ட முளைதனின் வளர்வை நாளும்தான் காட்டும் உன்னகை சாய் திரு
சிவனின் ஒண் சிரத்தில் மகிமை கொள் கங்கையை மப்பிறையை கனிவின்றி, காமாட்சி, காய்த்தல்
என் தாயே சொல் காரணமே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam